நற்சாந்துப்பட்டி சிவன் கோயில்
அருள்மிகு சிதம்பரேஸ்வரர் உடனாகிய சிவகாமி அம்பாள்
புதுக்கோட்டை மாவட்டம் நற்சாந்துபட்டி அருள்மிகு சிதம்பரேஸ்வரர் உடனாய சிவகாமி அம்பாள் ஆலய முதல் மகா கும்பாபிஷேகம் 23.05.1928.புதன்கிழமையன்றும், இரண்டாம் மகா கும்பாபிஷேகம் 04.02.1972.
வெள்ளிக்கிழமையன்றும், மூன்றாம் மகா கும்பாபிஷேகம் 04.02.1991. திங்கட்கிழமையன்றும், நான்காம் மகா கும்பாபிஷேகம் 10.06.2005 வெள்ளிக்கிழமையன்றும் நடைபெற்றது. அருள்மிகு சின்ன ஊரணி பிள்ளையார் மற்றும் நாகருக்கு பராமரிப்பு பணிகள் செய்து 21.8.2020. வெள்ளிக்கிழமை அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. அருள்மிகு சிதம்பரேஸ்வரர் உடனாகிய சிவகாமி அம்பாள் திருக்கோவிலில் ஐந்தாம் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமையன்று 24.02.2021 சிறப்பாக நடைபெற்றது.
நற்சாந்துபட்டி நகரத்தார் புள்ளிகள் விவரம்
(2022 ம் ஆண்டு )
(2022 ம் ஆண்டு )
- 1) பிள்ளையார்பட்டி 245
- 2) இலுப்பக்குடி 190
- 3) இளையத்தாங்குடி 156
- 4) வைரவன்கோவில் 155
- 5) மாத்தூர் 99
- ஆக மொத்தம் 845
அருள்மிகு சிதம்பரேஸ்வரர் உடனாகிய சிவகாமி அம்பாள் திருக்கோவிலில்
நடைபெற்றுள்ள திருப்பணிகள்.
1
ஆலயத்தின் முன்புறம் 60 அடி உயரம் ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு காண்பவர் வியக்கும் வகையில் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.
2
திருக்கோவிலுள்ள பதினொன்று கோபுரங்களில் உள்ள பதுமைகள் சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு மிளிர்கிறது.
3
கஜா புயலினால் சேதம் அடைந்து, திருக்கோவில் மதில்களில் உள்ள உடைந்துபோன பூதகணங்கள் புதிதாக கட்டப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.
4
திருக்கோவிலில் சுவாமி, அம்பாள், பிள்ளையார், சுப்பிரமணியர், மகாலட்சுமி மற்றும் பைரவர் சன்னதி கர்ப்பகிரகத்தில் இருந்த டைல்ஸ் எடுக்கப்பட்டு கல்சுவர்கள் சுத்தம் செய்யப்பட்டு 11 மூலிகைகள் கலந்து கற்சுவர்கள் முழுவதும் பூசப்பட்டுள்ளது.
5
ஐந்து திருக்கோவிலில் உள்ள அலங்கார மண்டபம், சுவாமி மண்டபம், மற்றும் அம்மன் மண்டபம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வெடிப்புகள் சரி செய்யப்பட்டு புதிதாக வர்ணம் பூசப்பட்டு பொலிவுடன் திகழ்கின்றது.
6
திருக்கோவிலில் உள்ள எல்லா கல்மண்டபமும், தரை சுவர் மற்றும் சீலிங், சுற்றுச்சுவர் உட்புறம் மற்றும் வெளிப்புறம் முழுவதும் கெமிக்கல் கொண்டு சுத்தம் செய்து, அதன் மேல் அதிக அழுத்தம் கொண்ட தண்ணீர் மூலம் சுத்தம் செய்யப்பட்டு, புதிதாக கட்டியது போல் பொலிவுடன் திகழ்கின்றது.
7
திருக்கோவிலின் மேல்தளம் சுமார் 20,000 சதுர அடி நிலம் சுத்தம் செய்யப்பட்டு, தள ஒடுகளில் உள்ள விரிசல்கள் சரிசெய்யப்பட்டு டெரகோட்டா வர்ணம் பூசப்பட்டு உள்ளது.
8
திருக்கோவிலின் மேல்தளத்தில் உள்ள ஜன்னல்கள் மழைநீர் உள்ளே வராமல் இருக்க இரும்பு தகரம் கொண்டு கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது
9
திருக்கோவில் முழுவதும் ஏற்கனவே இருந்த மின்சார கம்பிகள் மற்றும் விளக்குகள் ஆகியவை பழுதடைந்து போனதால் முற்றிலும் புதிதாக மின் கம்பிகள் அமைக்கப்பட்டு, புதிதாக LED விளக்குகள் அமைக்கப்பட்டு, திருக்கோவில் இப்போது மின்னொளியில் மிளிர்கிறது.
10
திருக்கோவிலில் மின்சாரம் இல்லாத நேரத்தில் பூஜைகள் தடைபெறாமல் நடப்பதற்காகவும் மற்றும் ஜெனரேட்டர் போடாமல் தடையில்லா மின்சாரம் வேண்டி 4 KVA சோலார் பேனல்கள் மேல்தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
11
திருக்கோவிலில் உள்ள அனைத்து வாகனங்களும் பழுது பார்க்கப்பட்டு புதிதாக ஒளிரும் வண்ணம் வர்ணம் பூசப்பட்டுள்ளது.
12
திருக்கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் விளக்கு ஏற்றப்பட்டு அழுக்கும், கறையும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, திருக்கோவிலின் தெற்குப் பகுதியில் உள்ள மணிமண்டபம் ஏரியாவில், சில்வர் தட்டுகளில் விளக்கு ஏற்றுவதற்கு தனியாக இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
13
திருக்கோவிலில் அலுவலக கட்டிடம் ஒன்று 256 சதுர அடியில் புதிதாக வெளிப்பிரகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
14
திருக்கோவிலில் உள்ள வெளிப்புற மதில் சுவர்களில் ஏற்பட்டு இருந்த வெடிப்புகள் சரி செய்யப்பட்டு அதிக அழுத்தம் கொண்ட தண்ணீர் முழுவதும் நீக்கப்பட்டு புதிதாக கண்ணைக் கவரும் வண்ணம் வர்ணம் தீட்டப்பட்டு உள்ளது.
15
திருக்கோவிலின் மடப்பள்ளியில் புகையால் ஏற்பட்ட தடைகள் நீக்கப்பட்டு அடுப்புகள் புதிதாக அமைக்கப்பட்டு, கிரானைட்டில் புதிதாக கல் பதித்து, புதிதாக மின்சார கம்பிகள் மற்றும் LED விளக்குகள் அமைத்து புதுப்பிக்கப்பட்டுள்ளது.
16
திருக்கோவிலில் உள்ள தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்யப்பட்டு புதிதாக குழாய்கள் அமைத்து புதுப்பிக்கப்பட்டுள்ளது.
17
திருக்கோவிலில் உள்ள சன்னதிகளுக்கும், இராஜகோபுர படிகளிலும் ஏறிச் செல்வதற்கும் வசதியாக எவர்சில்வர் ஆன கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வெளியில் உள்ள குடைவரை பிள்ளையார் முதல் முருகன் சன்னதி வரைக்கும் ஆடு, மாடுகள் உள்ளே வராமல் தடுப்பதற்கு எவர்சில்வரில் தள்ளுகதவு அமைக்கப்பட்டுள்ளது.
18
திருக்கோவிலில் உள்ள திருவாச்சி, உற்சவ மூர்த்திகள், சர விளக்குகள் அனைத்தும் மெருகு போடப்பட்டுள்ளது.
19
திருக்கோவிலின் திருக்குளம் சுத்தம் செய்யப்பட்டு சுற்றிலும் கம்பிகளில் ஆன வேலிகள் அமைக்கப்பட்டு மேலும் திருக்குளத்திற்கு வரும் நீர் வரத்துகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு, திருக்கோவிலின் மேல் தளம் அனைத்திலும் வரும் மழைநீர் குழாய்கள் மூலம் சேகரித்து இப்பொழுது திருக்குளத்திற்கு நீர் வரும்படி செய்யப்பட்டு நீர் நிரப்பப்பட்டுள்ளது.
20
திருக்கோயிலை சுற்றி வெளிப்புறம் சுத்தம் செய்யப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டு, 27 நட்சத்திர மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரித்து வரப்படுகின்றது.
21
திருக் கோவிலில் கொடிமரம் பிரித்து சரிசெய்யப்பட்டு, முழுவதும் மெருகு கொடுத்து மாட்டப்பட்டுள்ளது.
22
திருக்கோவிலின் அலங்கார மண்டபத்தின் முன்புறம் 1,000 சதுர அடி புதிதாக கான்கிரீட் கல் பதிக்கப்பட்டுள்ளது.
23
திருக்கோவிலின் வெளிசுற்றுப்புற பாதை சரிசெய்யப்பட்டு, பக்தர்கள் நடந்து செல்வதற்கு வசதியாக கல் மராமத்து வேலை பார்த்துள்ளது.
24
திருக்கோவிலின் மேல் தளத்திற்கு ஏறிச் செல்வதற்கு, புதிதாக இரும்பில் ஆன ஏணிப்படி அமைக்கப்பட்டுள்ளது.
25
திருக்கோவிலின் அனைத்து சுவாமிகளுக்கும் சில்வரில் ஆன பெயர் பலகை மற்றும் போர்மில் ஆன பெயர்ப்பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது.
26
திருக்கோவிலின் வெளிப் பிரகாரத்தில் பார்வதி விநாயகருக்கும், பாலசுப்பிரமணியருக்கும் புதிதாக கோபுர வேலைப்பாடுகள் மாடத்துடன் கட்டப்பட்டுள்ளது.
27
திருக்கோவிலின் உள்ளே காசி விஸ்வநாதர் சன்னதியின் இருபுறமும் உற்சவமூர்த்தி விக்கிரகங்கள் வைக்கப்பட்டு இருந்த மரத்தினால் ஆன மேடைகள் சேதம் அடைந்த காரணத்தினால், புதிதாக கல்லினால் ஆன மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள அனைத்து திருப்பணிகளும் நற்சாந்துபட்டி நகரத்தார்கள் மற்றும் பெண் பிள்ளைகள் அளித்த நன்கொடையாலும், புள்ளி வரியாலும் மற்றும் அனைவரின் ஒத்துழைப்பாலும் நிறைவு பெற்று இத்திருக்கோவிலின் நன்னீராட்டு பெருவிழா இனிதே நடைபெற்றது. மேலும் கோவிலில் விசேஷ தினங்களான அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை, சஷ்டி, சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி, துர்க்க பூஜை, மஹாலட்சுமி பூஜை, தட்சிணாமூர்த்தி பூஜை, ஆகியன சிறப்பாக நடைபெறுகிறது.

