வைரவன் கோவில்






முப்பலி கருப்பர் சன்னதி
ராஜகோபுரத்தின் வடகிழக்கு பகுதியில் இலுப்பை மரம் ஒன்று உள்ளது. இந்த இலுப்பை மரத்தில் தான் கருப்பர் ஐக்கியமாகி உள்ளார். கருப்பருக்கு என்று தனி உருவம் எதுவும் இல்லை. இலுப்பை மரத்தின் முன்புறம் சிறு பீடத்தை எழுப்பி அதை வணங்கி வருகிறார்கள். சங்கூதி கருப்பர், சோனையன் முதலான பரிவார தெய்வங்களுக்கு அருகில் பீடங்கள் உள்ளது. இந்த மரம் 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கருதப்படுகிறது. இந்த கருப்பருக்கு ராஜகோபுரத்தின் வடதிசையில் கல் திருப்பணியில் ஒரு கோயில் எழுப்பி உள்ளார்கள். கருவறை கிழக்கு திசை நோக்கி இருந்தாலும் பீடம் கருவறையின் வட திசையை ஒட்டி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கருப்பர் வாசம் செய்யும் இடம் இலுப்ப மரமாக இருப்பதால் இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. தனி பீடத்தில் எந்திரம் அமைக்கப்பட்டு அதை கருப்பராக கருதி வழிபாடு செய்கிறார்கள். கருப்பருக்கு உரிய ஆயுதங்களான வெட்டரிவாள்,சூலத்தண்டு,சுக்கு,மாந்தடி,குத்துவாள், ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. கருப்பர் அணியும் பாதக்குறடு ஒன்று பீடத்தின் முன்புறம் வைக்கப்பட்டுள்ளது.
கருப்பருக்கு கருங்கிடா, செங்கிடா, பல நிறக்கிடா ஆகிய மூன்று வகை கிடாக்களை பலி கொடுப்பதால் இவருக்கு முப்பலி கருப்பர் என்று பெயர் வந்தது. இவை தவிர தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, நர்த்தன விநாயகர், விஷ்ணு துர்க்கை, துவார கணபதி, வயிரவர், ஆதிமூலம் ராமர், அர்த்தநாரீஸ்வரர், மாணிக்கவாசகர், நர்த்தன வயிரவர், வடுக வயிரவர், பிட்சாடன மூர்த்தி, ராமர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு விக்கிரகங்கள் உள்ளது.
வயிரவன் கோயில் புராணம்
வயிரவன் கோயிலின் சிறப்பையும் வடிவுடை அம்மை உடனாகிய வளரொளிநாதர் பெருமையையும், வயிரவர் சுவாமியின் சிறப்பையும், பெரிதும் கூறுவது வயிரவன் கோயில் புராணம் என்னும் செய்யுள் நூலாகும். இந்த நூல் கி.பி பத்தொன்பதாம் நூற்றாண்டில் சேந்தன்குடி வி.நடராஜ கவிராயர் அவர்களால் இயற்றப்பட்டது. இந்த நூலை தேவகோட்டையைச் சேர்ந்த வீரசிகாமணி லெ. சின்னையன் செட்டியார் அவர்களால் புத்தகமாக வெளியிடப்பட்டது.
வயிரவர் கோயில் புராணம் மொத்தம் 17 படலங்களைக்களை கொண்டதாகும். அவையாவன 1) பாயிரம், 2) நாட்டுப்படலம், 3) நகரப்படலம், 4) நைமிசபடலம், 5) புராணவரலாற்றுப்படலம், 6) தல விசேடப் படலம், 7) தீர்த்த விசேடப் படலம், 8) மூர்த்தி விசேடப் படலம், 9) தேவர் படலம், 10) தேவர் சரண் புகு படலம், 11) வைரவ படலம், 12)அசுர சங்கார படலம், 13) தேவர் பூசித்த படலம், 14) ததீசி முனிவர் பூசித்த படலம், 15) சந்திரன் பூசித்த படலம், 16) சுக்கிரன் படலம், 17) கிரிகர படலம்.
மொத்தம் 1152 செய்யுட்கள் உள்ளன. அவற்றுள் நாட்டுப்படலம், நகரப்படலம், நைமிசப்படலம், புராண வரலாற்றுப் படலம், தல விசேடப் படலம், தீர்த்த விசேடப் படலம் ஆகியவற்றை தவிர்த்தும் பாயிரத்தைச் செய்யுள் வடிவத்திலேயே கொடுத்தும், எஞ்சிய பத்து படலங்களுக்கு எளிய உரைநடைச் சுருக்கம் தரப்பட்டுள்ளது.
வயிரவன் கோயில்தலம் கீழ்க்கண்ட பெயர்களில் இப்புராணத்தில் குறிக்கப்படுகிறது. வடுகநாதபுரி, வடுகநாதபுரம், வடுகன்மூதூர், வயிரவ நகர், வயிரவ மாபுரம்.
அரக்கர்களால் ஏற்பட்ட துன்பத்தினின்று மீள்வதற்காக தேவர்கள் வளரொளிநாதரிடம் அடைக்கலம் புகுந்தனர். அவர்களை காப்பாற்ற இறைவன் வயிரவக்கோலம் பூண்டார். கற்பகவிநாயகர் தலைமையில் அரக்கர்களை சம்ஹாரம் செய்து, இறுதியில் வயிரவமூர்த்தி அரக்கர் தலைவனை அழித்துத் தேவர்களை காப்பாற்றினார். இந்திரன், ததீசிமுனிவர், சந்திரன், சுக்கிரன் முதலியோர் இத்தலத்தில் பூசனை செய்து பாவம் நீங்கினார்.புராண நிறைவில் கிரிகரப் படலத்தில் நகரத்தார் வரலாறும், ஒன்பது நகரக் கோயில்கள் ஏற்பட்ட விவரமும் கூறப்படுகிறது. மேலும் இளையாற்றங்குடி, பிள்ளையார்பட்டி ஆகிய தலங்களின் பெருமையும் கூறப்படுகிறது. சேந்தன்குடி நடராஜ கவிராயர் அவர்கள் வடிவுடைஅம்மை மீது ஒரு பிள்ளைத் தமிழும் பாடியிருக்கிறார்.
வயிரவன் கோவில் பிரிவுகள்
வயிரவன் கோவில் நகரத்தார்கள் மூன்று பிரிவுகளை சேர்ந்தவர்கள்.
- சிறுகுளத்தூருடையார்
- கழனிவாசல் உடையார்
- மருதேந்திரபுரமுடையர்
இவர்களில் சிறுகுளத்தூர் உடையார் மூன்று பிரிவுகளை உடையவர்கள்.
- பெரிய வகுப்பு
- பிள்ளையார் வகுப்பு
- தெய்யனார் வகுப்பு
மற்ற இரு பிரிவுகளுக்கு உட் பிரிவு இல்லை எனத் தெரிகிறது.
வயிரவர்பட்டியின் சிறப்புகள்
1. அழிஞ்சில் ஸ்தல விருட்சம்
வயிரவர் கோயிலில் வெளிப்பிரகாரத்தில் அழிஞ்சி மரம் உள்ளது. இந்த தலத்துக்கு உரியது. ஏறழிஞ்சில் மரமாகும். இந்த மரத்தின் சிறப்பு இந்த மரத்திலிருந்து பழம் கீழே உதிர்ந்தால் மீண்டும் மரக்கிளையில் போய் ஒட்டிக்கொள்ளும்.
2. இரண்டு கொடிமரம்
இரண்டு கொடிமரங்கள் உள்ள ஒரே சிவன் கோவில் வைரவன்பட்டி மட்டும்தான்
3) ஒரே கல்லில் ஆன சிற்பம்
நடராஜர் சபையில் முக மண்டபத்தை ஒட்டியுள்ள வாயிலில் இருபுறமும் பாயும் குதிரையை அடக்கி பவனிவரும் குதிரை மறவர்களின் சிற்பங்கள் ஒரே கல்லில் செய்யப்பட்டுள்ளது. குதிரையின் முகத்திலும் கழுத்திலும் பல்வேறு மணிகளும் சதங்கையும் மலர்களும் கோர்த்துச் செதுக்கப்பட்டுள்ளது.
குதிரையின் மேல் வீரனின் சிற்பம் மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. அந்த வீரர்களின் வேல் கம்பியில் குத்துப்பட்ட கலைமான் உடும்பும் இயற்கையாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது.
வேகமாக பாயும் குதிரையின் கால் குளம்புகளில் கேடயத்தை நீட்டி தடுத்து நிறுத்தும் நிலையில் இரண்டு வீரர்கள் இருக்கிறார்கள். குதிரையின் மீது சவாரி செய்யும் வீரன் இருக்கிறார். அவரது இடுப்பில் நீண்ட வாள் செதுக்கப்பட்டுள்ளது.
4) ஒரே கல்லினால் தனிக்கோயில்
சண்டிகேஸ்வரர் எழுந்தருளியுள்ள தனிக்கோயில் ஒரே கல்லினால் செய்யப்பட்டது. சுமார் 20 டன் எடையுள்ள இக்கல்லை குன்றக்குடி அருகே உள்ள ஒரு மலையில் இருந்து ஒரே கல்லாக வெட்டி எடுத்து வந்து குடைந்து சண்டிகேஸ்வரர் சன்னதி உருவாக்கப்பட்டுள்ளது.
5) வலது பக்கம் வாகனம்
அனைத்து கோயில்களிலும் வயிரவருக்கு வாகனம் நாய் இடது பக்கம் பார்த்தபடி நின்றிருக்கும். ஆனால் நமது வயிரவன் கோயிலில் நாய் வலது பக்கம் பார்த்தபடி நிற்கிறது.
6) ஆஞ்சநேயரை வணங்கி நிற்கும் ராமபிரான்
சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு கிழக்குப் புறம் வடக்கு சுவற்றில் ராமபிரான் ஆஞ்சநேயரை வணங்கி நிற்கும் காட்சி காணப்படுகிறது. அனைத்து தலங்களிலும் ஆஞ்சநேயர் தான் ராமரை வணங்குவது போல் காட்சி இருக்கும். இது ஒரு அபூர்வமான சிற்பம் ஆகும்.
7) தோஷம் நீக்கும் பல்லி
அம்பாள் கருவறைக்கு பின்புறம் இரண்டு பல்லி சிற்பங்கள் உள்ளது. இவற்றை வழிபட்டால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இதற்கான சிறப்பு பூஜைகள் கோயிலில் செய்யப்படுகிறது.
8) வயிரவர் தீர்த்தம்
வயிரவரால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் கோயிலுக்கு வெளியே உள்ளது. இதில் நீராடி வயிரவரை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பாவங்கள் தீரும். நோய் அகலும். எதிரிகளின் பயம் நீங்கும் என்பது நம்பிக்கை.
9) வயிரவருக்கு தான் கடைசி பூஜை
வயிரவன் கோவிலில் ஒவ்வொரு நாளும் கடைசி பூஜை வயிரவருக்த்தான் நடைபெறும்.
10) வயிரவர் சிற்பம்
வயிரவர் சிற்பம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் வயிரவர் பத்ம பீடத்தில் நின்ற திருக்கோலத்தில் காணப்படுகிறார். அக்னி கேசம் தலைக்கோலமும் ஆபரணங்கள் நிறைந்த மார்பும் நான்கு கரங்களில் உடுக்கை பாம்பு சூலம் கபாலம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார். வயிரவருக்கு பின்புறம் அவரது வாகனமான நாய் வலது பக்கம் பார்தபடி நின்ற நிலையில் உள்ளது.
11) நெல்லி மரம்
இங்கு உள்ள நெல்லி மரங்களின் காய்களை எடுத்து சென்று இத்திருக்கோயிலின் ஊரணி தண்ணீரை பருகினால் நாய்க்கடி விஷம் இறங்கிவிடும். அந்த காயை எடுத்து வேறு இடத்துக்கு சென்று சாப்பிட்டால் இந்த பலன் கிடைக்காது.
12) 1416 சுதைச் சிற்பங்கள்
வயிரவர் கோயில் விமானங்களிலும் மண்டபத்தில் உள்ள அனைத்து விமானங்களிலும் சேர்த்து மொத்தம் ஆயிரத்து 1416 சுதை சிற்பங்கள் உள்ளது.
13) முதல் பிரகாரத்தில் வடகிழக்கு திசையில் கூரையில் வயிரவர் கோயில் தலபுராணம் தொடர்பான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
14) தென்கிழக்கு கூரையில் ராமாயணம் தொடர்பான காட்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
15) இக்கோவியிலின் சிற்ப வேலைப்பாடுகள் மிகவும் பிரசித்தி பெற்றது 1854 ஆம் ஆண்டு நகரத்தார் திருப்பணி வேலைகள் துவக்கப்பட்டு 1894 ஆம் ஆண்டு சிறந்த சிற்ப வேலைபாடுகளுடன் திருப்பணி நிறைவேறியது. 30 ஆண்டுக்காலம் வயிரவன்பட்டியிலேயே தங்கியிருந்து வயிரவன் கோயில் சிறப்பாகக் கட்டி முடிப்பதற்கு உறுதுணையாக இருந்தவர். தெய்வநாயக வகுப்பைச் சேர்ந்த கண்டனூர் அ.நா. குடும்பத்தினரான திரு.நா.அ.ராம.இராமசாமி செட்டியார் அவர்களையே சாரும்.
16) இக்கோவிலில் உள்ள கண்ணப்பர் சிற்பம் கண்கொள்ளாக் காட்சியாகும்.
17) திருப்பத்தூரில் உள்ள வயிரவர் கோயில் வயிரவருக்கு சிரசு ஸ்தானமாகும். வயிரவர் பட்டியிலுள்ள வயிரவர் கோயில் இதய ஸ்தானமாகும். இலுப்பைக்குடி உள்ள வயிரவர் பாத ஸ்தானமாகவும் விளங்குகின்றன.
18) வயிரவர் பட்டி கோயில் புராணம் மொத்தம் 17 படலங்களைக் கொண்டுள்ளது. இதில் 1152 செய்யுட்கள் உள்ளன. நாட்டுப்படலம், நகரப்படலம், நைமிச படலம் புராண வரலாற்றுப் படலம், தல விசேடப் படலம், தீர்த்த விசேடப் படலம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
19) இப்புராணத்தில் வயிரவர் கோயில் வடுகநாதபுரி வடுகநாதபுரம் வடுகன் மூதூர் பைரவர் நகர் வைரவமாபுரம் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகிறது.
20) இந்த நூல் சேந்தன்குடி திரு.வி.நடராச கவிராயரால் இயற்றப்பட்டது. இந்நூலை வெளியிட்டவர் தேவகோட்டையை சேர்ந்த திரு.வீர.லெ. சின்னையன் செட்டியார் அவர்கள்.
1. வயிரவருக்கு பிடித்தது சந்தனக்காப்பு
2. வயிரவருக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், செவ்வாழை, அவல் பாயசம், உளுந்து வடை, சம்பா அரிசி, சாதம், பால் பழவகைகள் ஆகியவற்றை வைத்து வழிபடுவது சிறப்பு.
3. 21 தேய்பிறை அஷ்டமி விரதம் இருந்தால் உங்களது விருப்பம் நிறைவேறும்.
4. வயிரவருக்குத் தாமரை, வில்வம் தும்பை சந்தன மாலைகள் அணிவிப்பது சிறப்பு. செவ்வரளி மஞ்சள் செவ்வந்திப்பூ போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது விசேஷம். மல்லிகைப் பூவை தவிர்க்க வேண்டும்.
5. செல்வத்திற்கு அதிபதியாக விளங்குபவர் சொர்ண ஆகர்ஷண வயிரவர். இவரது இடது கையில் கபாலத்திற்கு பதிலாக அட்சயபாத்திரம் இருக்கும்.
6. வயிரவருக்கு ஒரு சிவப்பு துணியில் ஒன்பது மிளகாய் போட்டு முடிச்சிட்டு நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.
7. சனீஸ்வரரின் குருநாதர் வயிரவர்.
ஸ்ரீ கால பைரவர் சஷ்டி கவசம்
- வருக வருக வடுகபைரவா வருக
- வளம் தர வருக வஜ்ரபைரவா வருக
- வருக வருக உக்கிரபைரவா வருக
- உவகைதர வருக உலகபைரவா வருக
- பைரவி போற்றும்பைரவா வருக
- ஆனந்த நடனா ஆனந்தபைரவா வருக
- ஆணவம் அழிக்கும் ஆக்ரோஷபைரவா வருக
- ஆபத்தில் காக்கும் ஆபதோத்தாரண பைரவா வருக
- காலத்தின் நாயகா காலபைரவா வருக
- கலக்கம் போக்கும் கதாயுதபைரவா வருக
- நலம் தரும் நரசிங்கபைரவா வருக
- நாளும் காக்கும் நாகபைரவா வருக
- கோபம் போக்கும் கோவிந்தபைரவா வருக
- ஞாலம் போற்றும் ஞானபைரவா வருக
- தாகம் தீர்க்கும் ராபாலனபைரவா வருக
- மோகம் போக்கும் முண்டனப்பிரபுபைரவா வருக
- அவலம் போக்கும் அஸிதாங்கபைரவா வருக
- குவலயம் காக்கும் குரோதனபைரவா வருக
- உலகம் புரக்கும் உன்மத்தபைரவர் வருக
- திருவருள் புரியும் திகம்பரபைரவா வருக
- சண்டைகள் தடுக்கும் சண்டபைரவா வருக
- ருசியான உணவு தரும் ருருபைரவா வருக
- சந்தோஷம் தரும் சம்காரபைரவா வருக
- பித்தம் போக்கும் பீஷணபைரவா வருக
- வருக வருக வரம் அருளும் வரத பைரவா வருக
- வருக தருக தாரளாமாய் தரும் தயாளபைரவா வருக
- பருகப் பருக பழரசம் தரும் பிதாமக பைரவா வருக
- பெருகப் பெருக செல்வம் தரும் பிசிதபைரவா வருக
- நடனம் புரியும் நர்த்தனபைரவா வருக
- சதிராடும் சர்ப்பபைரவா வருக
- ஆட்டமாடும் ஆனந்தபைரவா வருக
- பாட்டுப் பாடும் பர்வத வாகனபைரவா வருக
ஸ்ரீ கால பைரவர் போற்றி
- இன்னல் தரும் இதயநோய் போக்குவாய்போற்றி
- சங்கடம் தரும் சர்க்கரை நோய் போக்குவாய்போற்றி
- சீரழிக்கும் சிறுநீரகநோய் போக்குவாய்போற்றி
- உயிர்கொல்லி நோய் போக்குவாய்போற்றி
- உன்மதம் போக்குவாய்போற்றி
- குருட்டை நீக்குவாய்போற்றி
- கர்ப்ப தோஷம் போக்குவாய்போற்றி
- உஷ்ணரோகம் போக்குவாய்போற்றி
- ஓவ்வாமை அகற்றுவாய்போற்றி
- இளைப்பு நோய் நீக்குவாய்போற்றி
- சளித்தொல்லை போக்குவாய்போற்றி
- சருமத்தொல்லை நீக்குவாய்போற்றி
- விஷ பயம் போக்குவாய்போற்றி
- பொய் சூது பொல்லாங்கு நீக்குவாய்போற்றி
- விலங்குகள் தொல்லை போக்குவாய்போற்றி
- பகைமையை அழிப்பாய்போற்றி
- உடன்பிறந்தோர் உபத்திரம் தீர்ப்பாய்போற்றி
- அன்னையின் அகம் மகிழ்விப்பாய்போற்றி
- தந்தைக்கு தளரா நெஞ்சம் தருவாய்போற்றி
- முன்னோர்க்கும் நலம் தருவாய்போற்றி
- நல்லதொரு துணை தருவாய்போற்றி
- துணையின் துன்பம் களைவாய்போற்றி
- சந்தான பாக்கியம் தருவாய்போற்றி
- புத்திரதோஷம் போக்குவாய்போற்றி
- கடன் தொல்லை நீக்குவாய்போற்றி
- களிப்புடன் வாழ்விப்பாய்போற்றி
- என்றும் புகழ் தருவாய்போற்றி
- ஏற்றம் பெற செல்வம் தருவாய்போற்றி
- பொல்லாதவர் கொடும் பார்வை துன்பம் நீக்குவாய்போற்றி
- பில்லிசூனியக் கொடுமை போக்குவாய்போற்றி
- கெட்டவர் சதித்திட்டம் அழிப்பாய்போற்றி
- பேய் பிசாசு கொடுமை தீர்ப்பாய்போற்றி
- சேட்டைகள் போக்கும் சேத்திர பாலனேவருக
- பாசமிகு பைரவ மூர்த்தியேவருக
- காலனைவிரட்டும் கால பைரவாவருக
- சமயோசித புத்தி தரும் சமய பைரவாவருக
- கயவர்களுக்குக் காலனாகும் காலாக்கினி பைரவா வருக
- பாவிகளையழிக்கும் பாதாள பைரவாவருக
- சுகமான வாழ்வுதரும் சுகாசன பைரவாவருக
- சந்ததிதரும் சந்தான பைரவாவருக
- ஆபத்தை நீக்கிடும் ஆதி பைரவாவருக
- சிவபக்தியூட்டும் சிவஞான பைரவாவருக
- வெற்றிதனை விரைந்து தரும் வீர பைரவாவருக
- நிராயுதபாணிக்கும் நிம்மதி தரும் சூலாயுதபாணி பைரவா வருக
- சுற்றம் காட்கும் சுவேட்சர பைரவாவருக
- தடைகளிலிருந்து விடுவிக்கும் சுதந்திர பைரவாவருக
- விசாலமனம் தரும் விசாலாஷ பைரவாவருக
- சம்சாரவாழ்வுதரும் சம்சார பைரவாவருக
- குறைவிலா செல்வம் தரும் குபேர பைரவாவருக
- கல்வி உயர்வுதரும் கபால பைரவாவருக
- மேன்மைதரும் மேகநாத பைரவாவருக
- சோதனை நீக்கும் சோமசுந்தர பைரவாவருக
- கற்பனை வளம் தரும் மனோவேக பைரவாவருக
- அவமரியாதை போக்கும் அப்ரரூப பைரவாவருக
- சங்கடம் நீக்கும் சசிவாகன பைரவாவருக
- பூதபைசாத்தினை விரட்டும் சர்பூத பைரவாவருக
- தண்டனையிலிருந்து தப்புவிக்கும் தண்டகர்ண பைரவா வருக
- காதலில் வெற்றிதரும் காமராஜ பைரவாவருக
- லாபம் தரும் லோகபால பைரவாவருக
- பூமி செல்வம்தரும் பூமிபால பைரவாவருக
- ஆற்றல் தரும் ஆகர்ஷண பைரவாவருக
- கண்டத்திலிருந்து காத்திடும் பிரகண்ட பைரவாவருக
- அந்தகரையும் காக்கும் அந்தக பைரவாவருக
- தட்சணை பெறுவோருக்குமருளூம் தட்சிண்பித்தித பைரவா வருக
- வி்த்தையிலே வெற்றிதரும் வித்ய ராஜ பைரவாவருக
- அதிர்ஷ்டம் தரும் அதிஷ்டபைரவாவருக
- பிரஜைகளின் துன்பம் தீர்க்கும் பிரஜா பாலன பைரவா வருக
- குலம்காக்கும் குல பைரவாவருக
- சர்வமும் தரும் சர்வக்ஞ பைரவாவருக
- ஈனைனயும் காக்கும் ஈசான பைரவாவருக
- சிம்மமாய் வாழ்விக்கும் சிவராஜ பைரவாவருக
- சீரிய சிந்தனை தரும் ஸீதாபாத்ர பைரவாவருக
- கர்மவினை போக்கும் காலநிர்ணய காலபைரவாவருக
- குற்றம் களையும் குல பால பைரவாவருக
- சடுதியில் காத்திடும் வடுகநாத பைரவாவருக
- கோரவடிவு மாற்றும் கோரநாத பைரவாவருக
- புத்தி தரும் புத்திமுக்தி பலப்ரத பைரவாவருக
- லட்சுமி கடாட்சம் லலித ராஜ பைரவாவருக
- நிறைவான வாழ்வுதரும் நீலகண்ட பைரவாவருக
- சிக்கல் தீர்க்கும் சீரிட பைரவாவருக
- கஷ்டத்தில் காத்திடும் கால ராஜ பைரவாவருக
- பிதுர்க்களுக்கு சொர்க்கம் தரும் பிங்களேட்சண பைரவா வருக
- மண்டலம் போற்றும் ருண்ட மால பைரவாவருக
- விருப்பமானவற்றைத் தரும் விஸ்வரூப பைரவாவருக
- சலியாத வாழ்வுதரும் பிரளய பைரவாவருக
- கத்தும் கடலும் வாழ்த்தும் ருத்ர பைரவாவருக
- பட்டினி போக்கும் பயங்கர பைரவாவருக
- எதிர்ப்பழிக்கும் மகாரெளத்ர பைரவாவருக
- சோபித வாழ்வு தரும் சோமராஜ பைரவாவருக
- பீடு நடை போட வைக்கும் பிரேசத பைரவாவருக
- பூர்வீக சிறப்பு தரும் பூத வேதாள பைரவாவருக
- ரத்தபாசம் தரும் ரத்தாங்க பைரவாவருக
- பசிக்குணவு தரும் பராக்கிரம பைரவாவருக
- வினைகள் தீர்க்கும் விக்ன ராஜ பைரவாவருக
- நிர்மலமான நெஞ்சம்தரும் நிர்வாண பைரவாவருக
- சக்திக்கு பாதியுடல் தந்த சச்சிதானந்த பைரவாவருக
- அட்டாமா சித்தி தரும் ஒங்கார பைரவாவருக
- பைரவப்பிரியா் போற்றும் சிவ பைரவாவருக
- பண்ணாரி தாசனும் போற்றும் பால பைரவாவருக
- ராஜவேல் மைந்தன் வணங்கும் ராஜ பைரவாவருக
- முந்தைய சமணரும் வணங்கிய திகம்பர பைரவாவருக
ஸ்ரீ கால பைரவர் கவசம்
- பார்போற்றும் பைரவ சஷ்டி கவசம்
- பக்தரைக் காக்கும் நல்லதொரு கவசம்
- சண்முகசுந்தரம் பாடிய கவசம்
- நவபைரவர் அருளும் நற்கலசம்
- பைரவ சஷ்டி கவசம் இதனை
- செப்பிடுவோர் ஜெகமாள்வர்
- ஒதுவோர் ஓங்கு புகழ் பெறுவர்
- கூறுவோர் கூற்றனை வெல்வர்
- வாசிப்போர் வாழ்வுதனை பெறுவர்
- பாடுவோர் பார்போற்ற பவனி வருவர்
- சொல்வோர் சொத்துக்களைப் பெறுவர்
- கேட்போர் கேடான நோய் நீங்கிவிடுவர்
- சரணம் சரணம் பைரவா சரணம்
- சரணம் சரணம் ஸம்ஹார சரணம்
- சரணம் சரணம் திருவடி சரணம்
- ஓம் பைரவா போற்றி ஸ்ரீ கால பைரவர் திருவடிகளே போற்றி
- வாழி வயிரவர் கோயில் வளர் புகழ்
- வாழி வண்மை வணிகர் பெருங்குலம்
- வாழி மாது உமை மன்னன் அடியவர், வாழி வைதிக சைவ மரபெலாம்.
- சுடரொளி வீசும் ஜ்வாலா மகுடமும்
- முப்புரமெரி செய் முக்கண்ணும்
- முகவழகு கூட்டும் நாசியும்
- சீற்றம் காட்டும் சிங்க பல்லும்
- இடது செவியில் பொண்ணாபரணமும்
- இன்பமூட்டும் இளநகையும்
- அழகிய தோளும் அற்புத அழகும்
- மார்பில் பஞ்சவடி தரும் எழிலும்
- எழில் மிகு இடுப்பில் நாகாபரணமும்
- இளமை காட்டும் வாலிபமும்
- மணி ஓசை தரும் கிண்கிணியும்
- கையிலே கபாலமும் சூலமும்
- தோற்றமிகு கைகளிலே பலவகை ஆயுதமும்
- ஏற்றம் தரும் தோற்றமாய்
- பத்தினிப் பெண்டிரும் பார்த்து மகிழும் வண்ணம்
- பரவசம் தர வருகவே வருகவே
- மெய் உணவு கேட்ட மெய்யடியாரே
- உய்ய வழிகாட்டும் உத்தமரே
- பொய் புனைவோர் செயலறுக்கும் சீலரே
- சேய் மகிழ விரைந்து வருவீரே
- ஆணவ பிரமன் ஆர்ப்பரிக்க
- அன்னை பார்வதி மனம் நொந்திடவே
- ஆற்றல்மிகு மகா பைரவரும் வெளிக்கிளம்பி
- அச்சம் தரும் வடிவுடனே பிரமசிரம் துண்டித்தார்
- தலையொன்று துண்டான பிரமனும் சாபமிட்டான்
- தாயுமானவன் சிரித்தபடி ஏற்றான்
- கையிலொட்டிய கபாலத்துடன் பிச்சை ஏற்றிடவே
- பூமி நோக்கி வந்திட்டான் பூமிபால பைரவனே
- கற்றவர் போற்றும் காசியாம்
- பாவம் போக்கும் பத்ரிநாத்தாம்
- எங்கும் திரிந்தான் பரமன்
- காசியிலே கபாலம் கையைவிட்டுப் போனதே
- கபாலம் நீங்கிடவே விசுவநாதரை வணங்கிட்டார்
- காசியிலே நின் ஆட்சி நிலைக்கட்டுமென்றார்
- கால பைரவராய் ஈசனிருந்திட்டான்
- காலமெல்லாம் இன்னல் தீர்த்திட்டான்
- மூலப்பொருள் யாரெனெ ஒர் தேடல் நடந்திட்ட வேளையிலே
- ஜீவப் பொருளைத் தேடிய பிரமனும் பொய்யுரைத்தானே
- பொய்யுரைத்த வேளையிலே பொங்கியெழுந்த பைரவனும்
- கிள்ளியெடுத்திட்டான் அத்தலைதனை
- வீடு தேடியொரு வேளையிலே
- பிரம இல்லம் புகுந்து நின்ற பரமனையே
- ஐந்தில் ஒரு தலையே தூற்றியதாம்
- தூற்றிய துஷ்டதலையினைக் கிள்ளிட்டான் ஈசனுமே
- எத்தனை சொல்லினும் எப்படி சொல்லினும்
- அகங்காரம் கொண்டோர் ஆணவமுள்ளோர்
- அழிந்திடத் தான் வேண்டுமென்றே
- பிரம சிரம் துண்டித்தான் எம்பிரானே
- பத்திரிநாத்திலே பிரம்ம கபாலம் தெரித்து விழுந்ததாம்
- காசியிலே கபாலம் கையை விட்டகன்றதாம்
- கண்டியூரிலே கபாலம் நீருக்குள் மறைந்த
- மலையனூரில் பரமேஸ்வரியின் காலில் மிதிபட்டதாம்
- எல்லோர் ஆணவமும் பிச்சையேற்றிவிட்டார் பைரவர்
- முனிவரும் தேவரும் அனைவருமிதில் அடங்குவர்
- அன்னமளப்பவனுக்கே அன்னமிட்டாள் அன்னபூரணி
- ஆண்டியாய் அகிலம் எல்லாம் சுற்றிவந்தார் பரமனே
- இரத்தபிட்சை பெற்றிட வைகுண்டமேகினார்
- இடையிலே வந்த விச்வக்சேனர் சூலத்தில் சிக்கிவிட்டார்
- விஷ்ணுவோ விரைந்து தந்தார் ரத்தம்
- கபாலமே நிறையவில்லை மயங்கிவிட்டார் மகாவிஷ்ணு
- கண்ணான கணவன் மயங்கி விழவே
- கதறி அழுதிட்டாள் மஹாலட்சுமி
- கணவனுயிரைத் தருமாறு சாவித்திரியானாள்
- மணவாளன் உயிர் தந்தார் தங்கை மகிழ
- மாண்டவர் மீண்டால் மகிழ்வாரன்றோ
- மாயவனும் மகிழ்ந்திட்டார் வாக்குறுதி தந்திட்டார்
- பத்து அவதாரமெடுத்து பகைவரையழித்தே
- இரத்த மளித்து கபாலம் நிரப்பிவிடுவேன் என்றார்
- அந்தகாகரனென்னும் புதல்வனும் அசுரனானான்
- அகிலத்தையே ஆட்டிப் படைத்தான்
- அன்னையுருவு கண்டு ஆசைப்பட்டான்
- அவனை அழித்து அல்லல் அகற்றினார்
- மணி மல்லர்கள் செயிதிட்ட கொடுமை அதிகம்
- இனியொரு விதி செய்தே மக்களைக் காக்க
- கனிதரும் காயகல்பன் மார்த்தாண்ட பைரவனாகியே
- மதி கெட்டவர்களை அழித்திட்டார்
- முண்டன் என்றொரு கொடியவன்
- கண்டபடி தந்தான் துன்பங்களை
- அண்டம் நடுங்க ஆட்டி்படைத்தான்
- பிண்டமாய் வீழ்த்தினார் பைரவரே
- எண்ணங்களிலே மாற்றம் தரும்
- இதயத்திலே எழுச்சி தரும்
- அடியவருக்கு அருள் புரியும்
- பைரவ புராணத்தைப் பாடிடுவோம்
- காலத்தின்நாயகன்காலபைரவனென்றே
- ஜோதிடமும்ஆன்மிகமூம் கூறிடுமே
- விதியும் அவனே வெற்றியும் அவனே
- வேதமும் அவனெவேதநாயகனும் அவனே
- அட்டவீரட்ட தலங்கள் அற்புத்த் தலங்கள்
- ஆர்ப்பாட்டம் செய்தோரை அழித்த இடங்கள்
- அம்பலவாணன் பைரவருமான இடங்கள்
- அகிலேத்தோரை காத்திட்ட தலங்கள்
- தெய்வமொன்றுக்கு ஒரு மதம் என்றார்
- ஐந்து முக பைரவருக்கோ ஐந்து மதம் கண்டார்
- எத்தனை பிரிவோ அத்துணைக்கும் இவரே தெய்வம்
- அத்தனை மகத்துவமுடையோர் அருள் பெறுவோமே
- எங்கும் பைரவர் எதிலும் பைரவர்
- என்றோதி மகிழும் நெஞ்சோர் வாழ்க
- ஐந்து தலையரசே ஆகாசபைரவரே
- அல்லல் நீங்கிட வருவீரே

