நற்சாந்துப்பட்டி ஸ்ரீ சேவாத்தாள் படைப்பு
ஆரம்ப காலத்தில் நற்சாந்துபட்டி கடைவீதியில் திரு.கும. சுப சுப்பிரமணியன் செட்டியார் இல்லத்தில் படைப்பு வீடு அமைந்திருந்தது. தீபம் மட்டும் ஏற்றி வழிபாடு நடைபெற்று வந்தது. எந்த ஊரில் கோவில் அமைந்து இருக்கிறது என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை. திரு.கும.அ. பழனியப்ப செட்டியார் அவர்களும் திரு.கும. பழனியப்ப செட்டியார் அவர்களும் மாட்டு வண்டியில் செட்டிநாட்டு ஊர்கள் எல்லாவற்றிற்கும் சென்று, சேவாத்தாள் குடிகொண்டிருக்கும் கோவில் எங்கு உள்ளது, என்று ஒரு வருடம் தேடி கண்டுபிடித்தார்கள். திரு.கும. சித. சிதம்பரம் செட்டியார் வீட்டில் நிறைய கோடாங்கிகளைக் கொண்டு குறியும் கேட்டார்கள். அதன் பின்னர் விவரம் தெரிந்தது, சிவகங்கை மாவட்டம் கல்லல் என்ற ஊருக்கு பக்கத்தில் அரண்மனை சிறுவயல் என்ற ஊரில் வயல் வெளியில் களம் இருக்கும் இடத்தில் களத்திருடைய ஐயனார் கோவிலில் சேவாத்தாள் கோவில் முன் மண்டபத்தில் வீற்றிருக்கிறாள் என்பதை கண்டறிந்தனர்.

நற்சாந்துப்பட்டியில் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் நடந்த படைப்பு ஹீனதசையாக வெகுகாலம் படைப்பு நடக்காமல் இருந்தது. 1981ம் ஆண்டு நாற்சாந்துப்பட்டி வைரவன் கோவில் கழனிவாசலுடையார் நகரத்தார்கள் ஒருமித்து அருள்மிகு சேவாத்தாளை வழிபட ஏற்பாடு செய்ய முயற்சி செய்து வழிமுறைகளும் தொழுமுறைகளும் தெரியாமல் இருந்ததால் ‘ சேவாத்தாள் கோயில் சென்று சாமி அழைத்து, விவரம் கேட்டு தெரிந்து கொள்,’ என்று சொன்னதால் அதை மனமுவந்து ஒத்துக் கொண்டு இளையாற்றங்குடி அங்காளம்மன் மலையாள கருப்பரடி திரு. பாட்டையா பூசாரி மூலம் அழைத்து விவரம் கேட்டு அவர்கள் திருவாக்குப்படி, பூசாரி நியமணம் செய்தும் ஆனி மாதம் வளர்பிறை செவ்வாய்க்கிழமையில் படைப்பு நடத்துவது என்றும், அதற்கு நற்சாந்துப்பட்டி வயிரவன் கோவில் கழனிவாசலுடையார் நகரத்தார்கள் நான்கு கரையைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வது என்றும் முடிவு செய்தனர். இதில் இரண்டாவது கரையை சேர்ந்தவர்கள் பூசாரித்தனம் செய்கிறார்கள்.
நான்கு கரைப் பங்காளிகள் விவரம்
முதல் கரை: ப.குழ.சி.நா.சிவனடியான் செட்டியார், பழ.சி.ராம. சிவசாமி செட்டியார், பழ.கும. பழனியப்ப செட்டியார் வகையறா இரண்டாவது கரை: கும.சித.கும. குழ. வகையறா மூன்றாவது கரை: பெரி.பெ.பெரி.கு.ராம.கும வகையறா நான்காவது கரை: கும. அ. பழ. நான்கு முருகப்ப செட்டியார் வகையறா நற்சாந்துபட்டியில் வைரவன் கோவில் கழனிவாசல் உடையார் நகரத்தார்களால் ( 93 புள்ளிகள் ) 80 ஆண்டு காலம் வழிபடும் கோவில் 42 ஆண்டுகாலமாக 2 வருடத்திற்கு ஒருமுறை படைப்பு நடைபெற்று வருகிறது. நற்சாந்துப்பட்டி அருள்மிகு சேவாத்தாள் படைப்பும் இரண்டு ஆண்டுகளுக்கு ஓரு முறை கீழ்கண்ட சுற்றுப்படி பங்காளிகள் பொறுப்பேற்றுக்கொண்டு சிறப்பாக நடத்துகிறார்கள்.
- முதல் கரை
- இரண்டாவது கரை
- மூன்றாவது கரை
- நான்காவது கரை
வரவேற்பு பூஜை கொட்டகை போடுவது, பெயிண்டிங், புஷ்பம் வகையறா வாங்குவது. சுவாமி ஜோடனை வரவேற்புக்கு வேண்டிய சாமான்களை வாங்கி படைப்புக்கு கொடுப்பது, படைப்புக்கு வேண்டிய சாமான்களை கொடுப்பது, பூஜை வீடு மற்றும் கொட்டகை, மேளத்திற்கு ஆர்டர் கொடுப்பது, பெட்ரோமாக்ஸ் லைட், ஜெனரேட்டர், சீரியல் செட் ஏற்பாடு, செய்வது காளாஞ்சி விநியோகம் செய்வது ஊருக்குள் படைப்புக்கு சொல்லி இருபாலரையும் அழைப்பது போன்றவை.
பூஜை பொருட்கள் ஏலம், ஏலத்திற்கு வேண்டிய சாமான்கள் வாங்குவது, அன்பளிப்பு சாமான்கள் பெற்றுக் கொள்வது, அரண்மனை சிறுவயல் போய்வர, பஸ், வேன் ஏற்பாடு செய்வது. அரண்மனை சிறுவயல் அபிஷேக சாமான்கள் தயார்செய்வது, அரண்மனை சிறுவயல் போய்வர உணவு வசதிகள் ஏற்பாடு செய்வது, ஏலம் போடுவதும், வசூல் செய்வதும்
கொள்முதல், உக்ராணம்,மளிகை சாமான்கள், காய்கறி வகையறா எண்ணெய், நெய், உக்ராணத்தில் மிஞ்சும் சாமான்களை விற்பனை செய்வது போன்றவை.
சமையல் பாத்திரம் வகையறா வாங்குவது, பால், மோர் வாங்குவது அண்டா வகையறா வாங்குவது, திருப்பிக் கொடுப்பது, சமையல் கட்டு நிர்வாகம் செய்வது, சமையல்காரருக்கு சொல்வது போன்றவை.
மேற்படி நான்கு கரையைச் சேர்ந்த பங்காளிகளும் ஒவ்வோரு படைப்பின் போதும் கடிகார சுற்றுப்படி பொறுப்பை மாற்றி ஏற்று சிறப்பாக நடத்துவார்கள்
நான்கு கரையில் வயதில் மூத்தவர்கள் கரைக்கு ஒருவர் வீதம் நால்வரும் பூசாரியும் ஆக ஐந்து பேர்களும் படைப்பிற்கு முதல் நாள் பங்காளிகள் சூழ, களத்தீருடைய ஐயனார் கோவில் சென்று அபிஷேக ஆராதனை செய்து, தீர்த்தம் வைத்து தீபாராதனை பார்த்து, ஐவரும் தீர்த்த செம்பை எடுத்துக் கொண்டு நேரடியாக நற்சாந்துபட்டி படைப்பு வீட்டுக்கு வந்து தீர்த்த செம்பை வைத்து தீபம் பார்த்து வீட்டிற்கு செல்வர், மறுநாள் ஐவரும் குடம் எடுத்துக்கொண்டு பங்காளிகள் பெண் பிள்ளைகள் உறவினர்கள் சூழ மேள தாளத்துடன் பெரிய ஊரணி சென்று தண்ணீர் எடுத்து வந்து மேற்படி ஊரணிப் பிள்ளையார் கோவிலில் வைத்து தீபாராதனை பார்த்து படைப்பு வீட்டிற்கு கொண்டு வந்து வைத்து தீபாராதனை பார்த்து பூசாரியும் அவரது குடும்பத்தாரும் சேர்ந்து தென்புறம் சர்க்கரைப் பொங்கலும், வட புறம் வெண்பொங்கலும் வைப்பர். கத்தரிக்காய் முருங்கைக்காய் வாழைக்காய் போட்டு கூட்டு குழம்பு வைத்து பருப்பு மசித்து சுவாமிக்கு தாலிசாத்தி அலங்காரம் செய்து பள்ளயம் போட்டு புடவை, கால்மோதிரம், கீழ்ப்புற பள்ளயத்திலும் மேல்புற பள்ளயத்தில், வேட்டி, துண்டு வைத்தும் ஆராதனை செய்து எல்லோருக்கும் தீர்த்த பிரசாதமும் பால், விபூதி, சந்தனம் குங்குமம் கொடுத்து ஏக பந்தி போட்டு அனைவருக்கும் பள்ளய சாதம் வைத்து உணவு அளிப்பர்.
மறு நாள் காலையில் ஒரு பொங்கல் வைத்து இளம் படைப்பு படைப்பர். அன்று, மதியம் நகர விருந்து வைத்தும் மகிழ்வர், அன்று படைப்பு வீட்டில் ஏலம் நடத்துவர், பின், முதலில் பங்காளிகளில் வயதில் மூத்தவர் பூசாரிக்கு காளாஞ்சி கொடுத்து, பின், பங்காளிகள், பெண்பிள்ளைகள் உட்பட அனைவரும் பூசாரியிடமிருந்து காளாஞ்சி பெற்றுக் கொள்வர்.
நிறைவாக, அன்னையைத் துதித்து அன்னையின் அருள் வேண்டி அன்னையின் நாமம் சொல்லி தியானம் செய்து விடை பெறுவர்.
ஆடி 18க்கு அரண்மணை சிறுவயல் செல்லும் நிகழ்வு

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கோவை வாழ் நற்சாந்துப்பட்டி திரு.கும. கும. குமரப்ப செட்டியார் அவர்களின் முயற்சியால் பங்காளிகள் தந்ததை வாங்கிக் கொண்டும், மேற்கொண்டு தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டும் கோயிலுக்கு வருபவர்கள் தங்குவதற்கு வசதியாக பெரிய முன் மண்டபம் ஒன்று அரண்மனை சிறுவயல் திரு.சுப.உடையப்ப செட்டியார் அவர்களின் மேற்பார்வையில் கட்டி முடித்து ஆடி 18ல் திறப்புவிழா செய்யப்பட்டது. அதுமுதல் ஒவ்வொரு ஆடி 18ம் தேதி பங்காளிகளுடன் சென்று வழிபட்டு வருகிறார்கள். தந்தையுடைய வழிபாடு நினைவாக அவருடைய புத்திரன் திரு.கும. சுப்ரமணியன் செட்டியார் அவர்களும் தற்போது அவருடைய புத்திரர்கள் திரு. சுப. நடராஜன், திரு. சுப. குமரப்பன் என்ற சிவஞானம் அவர்களும் சிறப்பாக இன்றும் பங்காளிகளை அழைத்துக் கொண்டு வழிபட்டு வருகிறார்கள்.

திரு.கும. கும. குமரப்ப செட்டியார்
நற்சாந்துப்பட்டி

திரு.சுப. உடையப்ப செட்டியார்
அரண்மனை சிறுவயல்
ஸ்ரீ சேவாத்தாள் போற்றி
- ★ ஓம் அரண்மனை சிறுவயல் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் அன்பே உருவான சேவாத்தாள்போற்றி
- ★ ஒம் அகிலம் காக்கும் சேவாத்தாள்போற்றி
- ★ ஒம் அதிபதி நாயகி சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் அன்பர்க்கு அருளும் சேவாத்தாள்போற்றி
- ★ ஒம் அருள்புரி நாயகி சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் ஆனந்த வடிவே சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் ஆத்ம நாயகி சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் ஆற்றலின் ஊற்றே சேவாத்தாள்போற்றி
- ★ ஒம் ஆணவம் அழிப்பாய் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் ஆளுமெய் அரசே சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் ஆன்றோர்க் கருள்வாய் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் இன்பத்தின் எல்லையே சேவத்தாள்போற்றி
- ★ ஓம் இசைபட நின்றாய் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் இருவிழி ஆனாய் சேவத்தாள்போற்றி
- ★ ஒம் இதந்தரும் தாயே சேவாத்தாள்போற்றி
- ★ ஒம் இதயத் துடிப்பே சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் இறங்கிவந்து காப்பாய் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் ஈரேழ் உலகின் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் ஈகை குணமே சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் ஈடிலா மணியே சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் ஈந்தருள் புரிவாய் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் உலகெலாம் உணர்ந்த சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் உள்ளொளி தந்தாய் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் உயிரெல்லாம் ஆனாய் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் உலகைக் காக்கும் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் ஊனே உயிரே சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் ஊழ்வினை அழிப்பாய் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் ஊழியின் முதலாய் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் ஊக்கம் அருள்வாய் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் எண்குணம் படைத்த சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் என்றும் அருள்வாய் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் எண்ணமெலாம் நிறைந்த சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் எங்கும் நிறைந்த சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் எழில்நிறை தாயே சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் எங்களைக் காக்கும் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் ஏகாந்த நாயகி சேவத்தாள்போற்றி
- ★ ஓம் ஏற்றருள் புரிவாய் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் ஏற்றம் கொடுப்பாய் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் ஐஸ்வர்ய நாயகி சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் ஐயம் ஒழிப்பாய் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் ஐம் புலன் காக்கும் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் ஒருபெருந் தலைவி சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் ஒளியாய் நிறைந்த சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் ஒற்றுமை காக்கும் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் ஓங்கார நாயகி சேவாத்தாள்போற்றி
- ★ ஒம் ஒதற்கினிய சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் ஓடிவந்து காப்பாய் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் சன்மார்க்க நெறியே சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் சகலரைக் காக்கும் சேவத்தாள்போற்றி
- ★ ஓம் சிந்தை நிறைந்தாய் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் சிகரமாய் நின்றாய் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் சுற்றம் காக்கும் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் சுகம்பல கொடுக்கும் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் செங்கமலத் தாயே சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் செருக்கினை அழிப்பாய் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் தரணிக்கோர் தலைவி சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் தன்னல மில்லா சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் திக்கெட்டும் வாழும் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் தினம்எனைக் காப்பாய் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் திரிபுர சுந்தரி சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் திருமகள் வடிவே சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் திருப்பணி வளர்க்கும் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் பொன்மணி அணிந்த சேவாத்தாள்போற்றி
- ★ ஒம் புண்ணியம் கொடுக்கும் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் வானவர் போற்றும் சேவாத்தாள்போற்றி
- ★ ஒம் வளம்பல கொடுக்கும் சேவாத்தாள்போற்றி
- ★ ஒம் தேனமுத சுவையே சேவாத்தாள்போற்றி
- ★ ஒம் தீங்கினை அழிப்பாய் சேவாத்தாள்போற்றி
- ★ ஒம் தித்திக்கும் அமுதே சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் தீவினை அகற்றும் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் முக்தி அருள்வாய் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் மூவுலகு ஆனாய் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் முப்பெரும் பொருளே சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் கொடியவரை அழிப்பாய் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் கோடிநன்மைகள் தருவாய் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் வேதத்தின் முதலே சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் வேண்டிய வரம்தரும் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் செம்பொன் அடியே சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் செல்வம் கொழிக்கும் சேவாத்தாள்போற்றி
- ★ ஒம் மண்பதை தாயே சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் மங்கலம் தருவாய் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் குன்றின் விளக்கே சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் குவலயம் காப்பாய் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் சேவித்தவரைக் காக்கும் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் சேமம்பல நல்கும் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் பண்பின் சிகரம் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் பல்லுயிர் காக்கும் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் நகரத்தார் துணையே சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் நல்விருந்து படைக்கும் சேவாத்தாள்போற்றி
- ★ ஒம் துயர்தனை துடைக்கும் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் தூயமணி விளக்கே சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் நாடியதை அருளும் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் நற்கருணை தாயே சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் கவலைகள் போக்கும் சேவாத்தாள்போற்றி
- ★ ஒம் கருணையின் சிகரம் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் கற்றவர் போற்றும் சேவாத்தாள்போற்றி
- ★ ஒம் கண்ணின் மணியே சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் விண்ணவர் போற்றும் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் வெற்றியை நல்கும் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் வறுமையைப் போக்கும் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் வருங்காலம் படைக்கும் சேவாத்தாள்போற்றி
- ★ ஒம் பொன் பொருள் வழங்கும் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் புகழ்பட விளங்கும் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் வாணிகம் பெருக்கியே சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் வள்ளலைப் படைத்த சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் நற்கருணை நல்கும் சேவாத்தாள்போற்றி
- ★ ஓம் நற்சாந்துப்பட்டி வாழ்சேவாத்தாள் போற்றி ! போற்றி !
