அரண்மனை சிறுவயல்
ஸ்ரீ களத்தீருடைய ஐயனார் கோவில்
அரண்மனை சிறுவயல்
அரண்மனை சிறுவயல் ஊர் எல்லையில் வலதுபுறம் திரும்பி இரண்டு கிலோமீட்டர் பயணம் செய்து, களத்திவயலில் உள்ள களத்தீருடைய ஐயனார் கோவில் சென்று அடையலாம்.
களத்தீருடைய ஐயனாருடன் பரிவார தெய்வங்களாக காளி அம்மன், பெரியகருப்பர், சின்ன கருப்பர், நொண்டி கருப்பர், பேச்சி, ராக்கச்சி, ஏழுகன்னிமார் சேவாத்தாள், வீரபத்திரர், அபய பண்டிதர், ஆதிரை அம்மன் ஆகியோருடன் விநாயகர் வள்ளி தெய்வானை உடனாய சுப்பிரமணியர், ஆஞ்சநேயர் ஆகியோரும் கருவறையின் முன் மண்டபத்தின் இடது பக்கம் வைரவரும் உள்ளனர். கோவில் விழாக்களில் குதிரை எடுப்பு சிறப்புடைய ஒன்று.
இக்கோவில் ஏற்படுவதற்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்ச்சி. இந்த வழியாக அருகிலுள்ள கிராமத்துக்காரர்கள் பால் கொண்டு போவது உண்டு. ஒவ்வொரு முறையும் இந்த இடத்தில் செல்லும் சமயம் அவர்கள் கால் இடறி தடுமாறிப் பால் கீழே கொட்டிக் கொண்டிருந்தது. இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்றெண்ணிக் கிராமத்துக் காரர்கள் இவ்விடத்தை தோண்டிய போது திடீரென இரத்தம் பீறிட்டது. பின்னர்தான் நிலத்தில் ஐயனார் சிலை புதையுண்டிருப்பதும், அதன் தலையில் வெட்டுப்பட்டுத்தான் இரத்தம் வெளிப்பட்டது என்பதும் தெரியவந்தன. தலையிலும், தோளிலும் வடுக்கள் உள்ள இந்த ஐயனார் சிலையை வைத்தே இந்த கோவில் எழுந்தது.
முன்னர் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தப் பகுதியில் சாலை அமைக்கும் வேலை நடைபெற்றுக் கொண்டு இருந்தது அதன் மேற்பார்வையாளராக இருந்த ஆங்கிலேய அதிகாரி ஒருவர் இக்கோவில் வழியே குதிரையில் போய் கொண்டு இருந்திருக்கிறார் அப்போது இரு சேமக் குதிரைகள் இருப்பதை கண்டு ஏளனமாக சிரித்தவாறு, உனக்கு போட்டியாக அதோ அங்கு இரு குதிரைகள் இருப்பதை பார் என்று தம் குதிரையிடம் கூறியிருக்கிறார். அத்துடன் நில்லாது ஒரு சேமக் குதிரையின் அருகில் சென்று சிறிது புல்லை நீட்டி, ம்..... சாப்பிடு என்று ஆணவத்துடன் கூறியிருக்கிறார். அடுத்த நிமிடம் மண் குதிரை, அவர் நீட்டிய புல்லைப் பறித்து தின்ன, பிரிட்டிஷ் அதிகாரியும் அவர் குதிரையும் அந்த இடத்திலேயே உயிர் துறந்தனராம். அதிலிருந்து நடுநிசியில் இந்தப் பகுதியில் குதிரையின் குளம்பொலி கேட்பதுண்டு.
மேலும் ஒரு வருடம் மழை பெய்து கண்மாய் நிரம்பி இருந்தபோது ஒரு நாள் நள்ளிரவில் மீண்டும் திடீரென பலத்த மழை பெய்தது. அதில் கண்மாய் கரை உடைக்கும் தருவாயில் இருக்கவே அய்யனார் உடனடியாக பெரியகருப்பர், சின்னகருப்பர் சுவாமிகளை, அழைத்து குதிரையில் சென்று கரை உடைந்து விடாதபடி காவல் இருக்குமாறு கட்டளையிட்டார். அவர்களும் அய்யனார் உத்தரவுப்படி குதிரையில் சென்று கண்மாய் கரை உடைக்காதவாறு காவல் இருந்தனர். அய்யனார் அன்றிரவே ஜமீன்தார் கனவில் தோன்றி மழையால் கண்மாய் கரை உடைக்க இருக்கிறது நீங்கள் இப்படி தூங்குகிறீர்களே என்று கூறி நான் கரை உடைக்காதவாறு காவலுக்கு குதிரையுடன் கருப்பர்களை அனுப்பி இருக்கிறேன். அவர்கள் விடிந்ததும் தாங்கள் அறிய குதிரையை நிறுத்திவிட்டு கோவிலுக்கு வந்து விடுவார்கள். நீங்கள் குதிரையை கோவிலுக்கு கொண்டு வந்து சேருங்கள் என்று கூறி மறைந்தார்,
ஜமீன்தாரும் விடிந்ததும் ஊர் மக்களை அழைத்து நடந்ததை கூறி அனைவரும் கண்மாயை நோக்கி சென்றனர். அங்கு கண்மாய்க்கரை உடைக்கும் தருவாயில் உள்ள இரண்டு இடத்தில் ( மண் ) குதிரைகள் இரண்டு இருந்தது. இதனை கண்ட மக்களுக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் உண்டாயிற்று. உடனடியாக இறங்கி மக்களை காப்பாற்றும் அய்யனார் களத்தில் அய்யனார் என முழக்கமிட்டு வணங்கினார்கள். மேலும் கரையில் இருந்த குதிரைகளை மக்கள் தாரை தப்பட்டையுடன் தூக்கி வந்து கோவிலில் சேர்த்தனர். அன்று முதல் களத்திருடய அய்யனார் என்று விளங்கியதாக கருதப்படுகிறது.
ஒருமுறை நற்சாந்துபட்டியில் இருந்து வண்டிப் பயணமாக அருள்மிகு களத்தீருடைய ஐயனார் கோவில் செல்லுகையில் மத்தியில் ஓர் இரவு தங்கி இருக்கையில் இவர்கள் கொண்டு சென்ற சாமான்கள், அபிஷேக, ஆராதனை பொருட்கள் திருடு போனதாகவும், மறுநாள் காலையில் பார்த்து இது தகுமா ? இது முறையா ? என ஐயனாரிடம் முறையிட்டு விட்டு மேற்கொண்டு அபிஷேக ஆராதனைக்குப் புதிதாக பொருட்களை வாங்கிக்கொண்டு தெய்வமே துணை, என்று களத்திருடைய ஐயனார் கோவில் சென்று பொங்கலிட, திருடியவர்களுக்கு கண் ஒளி மங்கி, வழித்துணை பிடித்து ஓடோடி கோவிலுக்கு வந்து திருடிய பொருட்களை கொடுத்து,பிழைக்க வழி தெரியாமல் செய்த தவறை உணர்ந்து ‘ தாயே துணை’ என நிற்க அவர்களுக்கு பார்வை வந்ததாக முன்னோர்கள் சொல்லத் தெரியவருகிறது. இவரை நல்லுடைய ஐயனார், நல்லுடையப்பன், கண்கொடுத்த ஐயனார் என்றும் அழைக்கின்றனர்.
நமது சமூகத்தில் தோன்றியவர்கள் அருள்மிகு சேவாத்தாள் அவர்கள் திருமணமாகி பேறுகாலத்திற்குத் தன் தாய்வீடு வருகிறார்கள் பிரசவம் ஆகிறது. தகப்பனார் தன் மகளையும், பிரசவித்த குழந்தையையும் தீட்டுகள் சரிவர முடிவடையும் முன்பாகவே அவசரப்பட்டு சம்பந்தி வீட்டில் கொண்டு போய்விட கழனிவாசல் வயல் வழியாக வரும்போது தன் மகள் தாகம் எடுத்து தண்ணீர் கேட்க, தகப்பனார் தன்மகளை கோவில் முகப்பில் இருக்கச் செய்து தண்ணீர் கொண்டுவர கண்மாய்க்கு போய் இருந்த சமயம் மேற்படி பெண்ணாகிய சேவாத்தாள் நடந்து வந்த களைப்பில் அசந்திருக்க மடியில் இருந்த குழந்தை தெய்வ அருளால் தவழ்ந்து ஓடி அய்யனார் சிலை அருகே செல்ல, அது கண்ட தாய் பிரமித்து ஓடிச் சென்று குழந்தையை வாரி அணைக்கும் பொழுது தெய்வ ஒளியில் இருவரும் மறைந்து ஐயனாரிடம் ஐக்கியமாகி விட்டார்கள். தகப்பனார் தண்ணீர் கொண்டு வந்து மகளையும் பிள்ளையையும் காணாமல் ‘சேவாத்தாள், சேவாத்தாள்‘ என்றழைக்க கர்ப்பக்கிரகத்திலிருந்து ‘நாங்கள் இங்கே இருக்கிறோம்‘ என்ற ஒலி மட்டும் திரும்ப திரும்ப கேட்க ஒலி வந்த திசையில் தகப்பனார் திரும்ப, அங்கே அய்யனார் சன்னதியில் தாய் ஒளி வடிவத்தில் காட்சி கொடுத்தார்கள். அது கண்டு வணங்கி பின் அவர் வீட்டிற்கும், சம்பந்தி வீட்டிற்கும், குடி படைகளுக்கும் சொல்லி அனுப்ப அனைவரும் வந்து அன்னையை வணங்கினார்கள்.
அருவமாய் மறைந்து தெய்வீக நிலை அடைந்துவிட்ட அந்த தாய்க்கும் சேய்க்கும் உருவ வழிபாடு அவசியம் தேவை என்பதை நன்குணர்ந்த, தாய் வீட்டாரும்,புகுந்த வீட்டாரும் அவர்களைச் சார்ந்தவர்களும் அதற்குள்ள குடி படைகளும் கர்ப்பகிரகம் கட்டி வழிபட ஆரம்பித்து பிரதி வருடம் மகா சிவராத்திரிக்கு மறுநாள் கோயிலுக்கு வந்து அபிஷேக ஆராதனை செய்து தொட்டில் கட்டி பொங்கலிட்டு வழிபடுகிறார்கள். நகரத்தார்கள் இன்றும் திருமணமான மகளை கோவிலுக்கு அழைத்து செல்வதில்லை.
இந்த வழிபாடு செய்பவர்கள் நற்சாந்துபட்டி, கீழச்சீவல்பட்டி, தேவகோட்டை, வெற்றியூர், அரண்மனை சிறுவயல், நடராஜபுரம் மற்றும் பல ஊர்களிலும் இருக்கிறார்கள். நற்சாந்துப்பட்டியில் வயிரவன் கோயில் கழனிவாசலுடையார் நகரத்தார்கள் அருள்மிகு சேவாத்தாளைப் போற்றி வழிபட்டு வருகிறார்கள். சோவாத்தாளைப் போலவே ஐயனார் சந்நிதியில்,அபய பண்டிதர், வீரபத்திரர் ஆகியோரிடையே ஆதிரையம்மன் இறைவனிடம் ஐக்கியமான தாகச் சொல்கிறார்கள். அவர்கள் வேளார்களின் குலதெய்வம், அவர்களில் ஒரு பிரிவினர் வழிபடுகிறார்கள்.
திருவிழா

இக்கோவிலுக்கு வருடந்தோறும் திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி அன்று பச்சை பரப்பி மறுநாள் காவடி எடுப்பு, பால்குடம் கரும்புத்தொட்டில் கட்டுவது போன்றவை நடைபெறுகிறது. பாதாரக்குடி, குன்றக்குடி, ஆலங்குடி, புளியங்குடிப்பட்டி வெற்றியூர், மாலைக்கண்டான் ஆகிய ஊர்களில் இருந்து பக்தர்ள் 8 நாள் விரதம் இருந்து காவடிகளை கோவிலுக்கு கொண்டு வந்து சேர்க்கிறார்கள். மேலும் இப்பகுதி மக்கள் சித்திரை மாதம் 1ஆம் தேதி இக்கோவில் முன்பு உள்ள செங்கையில் ஒரு செம்பு தண்ணீர் எடுத்து வந்து தாங்கள் வயல்களில் ஊற்றி ஒரு சால் ஏர் ஓட்டும் பழக்கத்தை கடைபிடிக்கின்றனர். அப்படி செய்தால் அந்த வருடம் நன்கு விளையும் என இன்றும் இதை செய்து வருகின்றனர் மற்றும் ஒவ்வொரு வருடமும் எப்படி விளைச்சல் இருக்கும் என்பதற்கு பால் சிறப்பு விட்டு திருவளம் கேட்பதும் அது கூறியபடி நடக்கும் என்றும் கூறுகிறார்கள்.
மேலும் எத்திசையில் விவசாயம் செழிப்புடன் இருக்கும் என்பதை அறிய அய்யனார் கருவறையில் களிமண் வைத்து அடைத்து அய்யனார் சிலை மூழ்கும்படி தண்ணீர் ஊற்றி அது தலைக்கு நேர் மாலை போடப்படுவதகாவும், அம்மாலை எந்த திசையில் திரும்புகிறதோ அத்திசை மிக நன்றாக விளையும் என்று அறிந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.
அய்யனாருக்கு 5 வருடத்திற்கு ஒருமுறை குதிரை எடுப்பு திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவை காண பக்தர்கள் பல ஊர்களில் இருந்து வருகிறார்கள். பக்தர்களுக்கு கேட்டதை உடனடியாக வழங்குவதில் இந்த அய்யனாருக்கு நிகர் எதுவும் இல்லை என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

அரண்மனை சிறுவயல் வேளார்கள் பெயரும், அலைபேசி எண்களும்
அன்பு வேளார்
+91 97872 00440
முத்தையா வேளார்
+91 96779 98726
மெய்யப்பன் வேளார்
+91 6382 645 381
+91 99435 53308
கருப்பையா வேளார்
+91 85248 51686
கணேசன் வேளார்
+91 98435 57576
சுவாமிநாதன் வேளார்
+91 94863 60398
அர்ச்சுணன் வேளார்
+91 90475 47703
காசி வேளார்
+91 95783 21771
கனி வேளார்
+91 99435 59639
சந்திரன் வேளார்
+91 90422 06939
ஸ்ரீ களத்தி ஐயனார் அன்னதான அறக்கட்டளை
அரண்மணை சிறுவயல்
அன்னதான அறக்கட்டளை 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு அறக்கட்டளை முறைப்படி அரசாங்க சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பதிவு எண் 189/ 11 படி 15.02. 2011ல் பதிவு செய்யப்பட்டது.
உறுப்பினர்கள்





இதர உறுப்பினர்கள்

திரு. நா. உடையார் அம்பலம்,
த/பெ. நாராயணன், பெரியார் தெற்கு தெரு, வெற்றியூர், கல்லல் வழி, சிவகங்கை மாவட்டம்.
திரு. பெரி. இராமையா யாதவ்,
த/பெ. பெரியகருப்பன் யாதவ், நா.கோவில்பட்டி, மேலூர், மதுரை மாவட்டம்.
திரு. பா. காளீஸ்வரன்,
த/பெ. பாலுச்சாமி வேளார், கொல்லங்குடி, சிவகங்கை மாவட்டம்.
திரு. உ. முரளி யாதவ்,
த/பெ. உடையப்பன் யாதவ் , சுந்தனேந்தல், சிவகங்கை மாவட்டம்.
திரு. கு. ராம. கும. கும. இராமநாதன்செட்டியார்,
த/பெ.குமரப்ப செட்டியார், கம்பன் வீதி, நற்சாந்துபட்டி, புதுக்கோட்டை மாவட்டம்.
திரு. சி.வெள்ளைச்சாமி,
த/பெ. சின்னச்சாமி, சுந்தரநேந்தல், சிவகங்கை மாவட்டம்.
அறக்கட்டளையின் பணிகள்
1 ஸ்ரீ களத்தி ஐயனார் அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், உபயதாரர்கள் உதவியால் அன்னதான அறக்கட்டளை தொடர்ந்து தன் திருப்பணிகளை செய்து வருகிறது.
2. அன்னதான அறக்கட்டளை சார்பில் சுமார் 16 லட்சம் செலவில் பேவர் பிளாக் பதித்து அன்னதானக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 1.25 கி.மீ தூரத்திற்கு மண்பாதையும் முன்று பாலங்களும் அமைக்கப் பட்டுள்ளது.
3) ஸ்ரீ களத்தி ஐயனார், ஸ்ரீ பெரிய கருப்பர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா சிவராத்திரியன்றும், முக்கிய விசேஷ தினங்களிலும், சிறப்பு அபிஷேகம் செய்தல்.
4) மகா சிவராத்திரிக்கு ஒரு வாரம் முன்னதாக ஆலயம் வரும் பாதைகள் சீர்செய்தல், ஆலய பராமரிப்பு ஆலயம் உள்ளேயும் வெளியிலும் பராமரிப்பு செய்தல், ஊரணி சுத்தம் செய்தல், குடிதண்ணீர் அளித்தல்.
5) மகா சிவராத்திரி இரவு 10 மணி முதல் ஸ்ரீ களத்தி ஐயனாருக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் 21 வகையான சிறப்பு அபிஷேகமும் அறக்கட்டளை சார்பாக நடந்து வருகிறது.
6) மகா சிவராத்திரி அன்று மாலை 6 முதல் மறுநாள் மாலை 6 வரை அரண்மனை சிறுவயலிருந்து ஆலயத்திற்குச் சென்று வர இலவசவேன் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆலயத்திற்குத் தேவையான எண்ணெய், மின் கட்டணம் ஆகியவற்றை அறக்கட்டளை சார்பாக வழங்கப்படுகிறது.
7) ஆலயம் வரும் வழியில் இரு பக்கங்களிலும் மரங்கள் வளர்த்தல் மற்றும் ஆலயம் சம்பந்தபட்ட அனைத்துப் பணிகளையும் முன்னின்று நடத்துதல்.
8) மகாசிவராத்திரி அன்றிலிருந்து மறுநாள் மாலை 5 மணி வரை அறக்கட்டளை சார்பில் அனைத்து பக்தர்களுக்கும் தூய முறைப்படி உணவு அளித்தல்.
9) கடந்த 25 வருடங்களாக கோவிலில் உள்ள மின்விளக்குகளையும், மின்விசிறிகளையும் கட்டமைத்தும், பராமரிப்பு செய்தும், மின் கட்டணத்தையும் அன்னதான அறக்கட்டளைபொறுப்பு ஏற்று நடத்தி வருகிறது
ஸ்ரீ களத்திருடைய ஐயனார் அரண்மனை சிறுவயல்
சுமார் 40 வருடத்திற்கு முன்பு களத்தீருடைய ஐயனார் கோவிலுக்கு முதன்முதலாக மின் இணைப்பு ஏற்படுத்திக் கொடுத்தவர்கள், வெற்றியூர் திரு. உடையார் அம்பலம் அவர்கள். மேலும், அதற்கான மின் கட்டணத்தையும் அவர்களே செலுத்தி வந்துள்ளார்கள்
03-03-1972ல் நடந்த கும்பாபிஷேகத்தை நற்சாந்துபட்டி வயிரவன் கோவில் கழனிவாசலுடையார் நகரத்தார்களுடன், நற்சாந்துபட்டி திரு.கும.கும. குமரப்ப செட்டியாரும் அரண்மனை சிறுவயல் திரு சுப உடையப்பச் செட்டியாரின் மேற்பார்வையில் ஐயனாருக்கு முன் மண்டபம் கட்டி கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தியிருக்கிறார்கள். 2006ல் நடந்த கும்பாபிஷேகத்தை அரண்மனை சிறுவயல் திரு.சுப.உ.சுப்பிரமணியன் செட்டியார் அவர்கள் தலைமைப் பொறுப்பு ஏற்று நடத்தியுள்ளார்கள்.
2006இல் நடந்த கும்பாபிஷேகத்திற்கு கற்பகிரகம் மற்றும் போர்வெல் மோட்டார் ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் கல்லல் திரு. உ.கா. தெவ. டாக்டர். பழனியப்பச்செட்டியார் அவர்கள் மதிப்பீடு ரூ 4.5 லட்சம்
சேவாத்தாள் கோவில் கற்பகிரகம் மற்றும் ஐயனார் முன் மண்டபம் கட்டித் தந்தவர்கள், நற்சாந்துபட்டி வயிரவன் கோவில் கழனிவாசலுடையார் நகரத்தார்கள். மதிப்பீடு ரூ 7.25 லட்சம்
வயிரவர் கற்பகிரகம் கட்டி கொடுத்தவர் வெற்றியூர் திரு. உடையார் அம்பலம் அவர்கள். மதிப்பீடு ரூ.1.25 லட்சம்
வயிரவர் முன் மண்டபம் கட்டித் தந்தவர்கள் ரணசிங்கபுரம் யாதவ சமுதாயத்தவர்கள் மதிப்பீடு ரூ. 2.5 லட்சம்
மடப்பள்ளி கட்டித் தந்தவர் கல்லல் திரு. உ.கா.தெவ. டத்தோ சுப்பையா செட்டியார் அவர்கள். மதிப்பீடு ரு.1.50 லட்சம்
சுற்றுச் சுவர் அமைத்து கொடுத்தவர்கள் தேவகோட்டை மாத்தூர் கருப்பூர் கோவில் பங்காளிகள் மதிப்பீடு ரு. 2.5 லட்சம்
களத்தீருடைய ஐயனார் கோவிலில் முன்புற ஆர்ச் மற்றும் படித்துறை கட்டித்தந்தவர்கள் அரண்மனை சிறுவயல் திரு.சுப.வயிரவன் செட்டியார் குடும்பத்தினர். மதிப்பீடு ரு.1.50 லட்சம்
பெரிய குதிரைகள் இரண்டும் பழுது நீக்கி புதுப்பித்து தந்தவர்கள் அரண்மனை சிறுவயல் திரு.கரு.கண. குடும்பத்தினர்.மதிப்பீடு ரூ 75,000.
ஐயனாருக்கு வெள்ளி அங்கி செய்து கொடுத்தவர்கள், அரண்மனை சிறுவயல் திரு.லெ.அரு. காளையப்ப செட்டியார் அவர்கள். மதிப்பீடு ரூ 3.5 லட்சம்
நற்சாந்துபட்டி வயிரவன் கோவில் கழனிவாசலுடையார் நகரத்தார்கள் பங்களிப்புடன் திரு. சிவ. சேவா அழகப்பன் மேலதிக தொகையை அளித்து சேவாத்தாளுக்கு வெள்ளி அங்கி மற்றும் நம் படைப்புக்கு அரண்மனை சிறுவயலில் இருந்து தீர்த்தம் எடுத்து வர 5 வெள்ளிக் குடங்களும் செய்து கொடுத்துள்ளார்கள். மதிப்பிடு ரூ.6 லட்சம்
களத்தீருடைய ஐயனார் கோவில் சுற்று பிரகாரம் பேவர் பிளாக் கல் பதித்து கொடுத்தவர்கள் கடலூர் K.V. டெக்ஸ் உரிமையாளர்கள் திரு.M.கண்ணப்பன் மற்றும் அவர் சகோதரர் திரு.M. வெங்கடேஸ்வரன் அவர்கள். மதிப்பீடு ரு.15 லட்சம்
கோவில் வெளிப்பிரகாரத்தில் சம்மர் கூல் பெயிண்ட் அடித்து மேற்படியாளர்களால் கொடுக்கப்பட்டது. மதிப்பீடு ரூபாய் 40,000/-
2019ம் ஆண்டு கும்பாபிஷேகத்தை அன்னதான அறக்கட்டளை சார்பில் அரண்மனை சிறுவயல் திரு.சுப.உ.சுப்பிரமணியன் செட்டியார் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தினார்கள். நற்சாந்துபட்டி வைரவன் கோவில் கழனிவாசலுடையார் நகரத்தார்கள் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் யாகசாலைக்கு பொறுப்பை ஏற்று நடத்தினார்கள்.
மேலும் களத்தீருடைய ஐயனார் கோவிலுக்கு பல்வேறு வழிகளில் நன்கொடை அளித்தவர்கள் விவரம்,
பெண்கள் சுகாதார வளாகம் ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் வெற்றியூர் திரு. உடையார் அம்பலம் அவர்கள், மதிப்பீடு ரூபாய் ஒரு லட்சம்
போர்வெல், சமையலறை, காய்கறி நறுக்கும் வாரம் நா. கோவில்பட்டி திரு. ராமையா கோனார் அவர்கள். மதிப்பீடு ரூ 2.5 இலட்சம்.
களத்தீருடைய ஐயனார், பூரண, புஷ்கலா தேவிகளுக்கு தங்க முகம் செய்து கொடுத்தவர்கள் நா. கோவில்பட்டி திரு.ராமையாக் கோனார் அவர்கள் மதிப்பீடு ரூ 3 லட்சம்.
அரண்மனை சிறுவயலில் இருந்து களத்தில் அய்யனார் கோவிலுக்குச் செல்லும் சாலையில் ஆர்ச் செய்து கொடுத்தவர் வெற்றியூர் திரு. உடையார் அம்பலம் அவர்கள். மதிப்பீடு ரூ. 1 லட்சம்
கோவிலுக்குச் செல்லும் வழியில் சுமார் 1.25 கிலோ மீட்டருக்கு இருமருங்கிலும் சுமார் 400 மரக்கன்றுகள் அமைத்து சுமார் 4 வருடங்களாக பராமரித்து வருபவர்கள் கல்லல் திரு. உ. கா. தெ. சுப. தண்ணீர்மலை செட்டியார் அவர்கள். மதிப்பீடு ரு.4.5லட்சம்
ஐயனார் கோவில் முன்பாக அமைந்துள்ள ஊரணியை ஆழப்படுத்தி 12 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் கட்டி, கம்பி வலை அமைத்து, படிக்கட்டு கட்டி தந்தவர்கள், ரணசிங்கபுரம் யாதவ சமுதாயத்தினர் மதிப்பீடுரூ20லட்சம்
கோவில் வளாகத்தில் முடி இறக்கும் கொட்டகை ஏற்படுத்தி கொடுத்த உபயதாரர்கள் அரண்மனை சிறுவயல் திரு. அ.லெ. இளையபெருமாள் என்ற லெட்சுமணன் செட்டியார் அவர்கள் ரூபாய் ஒரு லட்சம் மற்றும் நச்சாந்துபட்டி திரு.பழ.சி.ராம.பழ.சிவ. பழனியப்பன், திரு.பழ.சி.ராம.பழ.சிவ. சேதுராமன் சகோதரர்கள் ரூபாய் இருபத்திஐயாயிரம் மொத்த மதிப்பீடு ஒரு லட்சத்து அறுபதாயிரம்.
1) அன்னதான அறக்கட்டளை முயற்சியால் அரசாங்க செலவில் முத்துப்பட்டி விலக்கில் இருந்து கோவில் வரை தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மதிப்பீடு ரூ. 52 லட்சம்.
2) அன்னதான அறக்கட்டளை முயற்சியால் அரசாங்க செலவில் கோவில் முன்பாக ஹைமாஸ் மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.மதிப்பீடு ரூ. 3.5 லட்சம்.
3) கோவில் முன்புறம் சோலார் மின்விளக்கு அமைத்து கொடுத்தவர் நற்சாந்துபட்டி திரு. கும. குமரப்ப செட்டியார் மகள் வழிப்பேரன் திரு. S. குமரப்பன் அவர்கள் மதிப்பீடு ரூபாய் முப்பதாயிரம்.
4) பெரிய கருப்பருக்கு 21 அடி உயரத்தில் இரண்டு அருவாள் செய்து கொடுத்தவர்கள் நடராஜபுரம் திரு. ராம. சுப்பிரமணியன் செட்டியார் அவர்கள் மதிப்பீடு ரூபாய் ஐம்பத்தொருஆயிரம்.
பக்தர்கள் நன்கொடை உதவியால் கீழ்க்கண்ட வெள்ளி அங்கிகள் செய்யப்பட்டு கடந்த 03.08.2022 பதினெட்டாம் பெருக்கு அன்று சுவாமிகளுக்கு அணிவிக்கப்பட்டன.
பெரிய கருப்பர் - 14 கிலோ
சின்ன கருப்பர் - 6.50 கிலோ
ஆஞ்சநேயர் - 4.30 கிலோ
வைரவர் - 8.5 கிலோ
சன்னதியில் உள்ளே உள்ள விநாயகர் - 3.25 கிலோ
மேற்படி நாகர் - 1.25 கிலோ
03.08.2022 பதினெட்டாம் பெருக்கு அன்று 40 கிடாய்கள் பெரிய கருப்பருக்கு படைக்கப்பட்டு 5 ஆயிரம் நபர்களுக்கு முக்கணிகளுடன் அன்னதானம் வழங்கப்பட்டது.
தனி நபர்கள் செய்து கொடுத்த வெள்ளியங்கிகள்
1. அய்யனாருக்கு 5 கிலோ எடையில் பீடம் செய்து கொடுத்தவர்கள் அரண்மனை சிறுவயல் திரு லெ. அரு. காளையப்ப செட்டியார் அவர்கள்.
2. அய்யனாருக்கு 3 கிலோ எடையில் திருவாச்சி செய்து கொடுத்தவர்கள் கல்லல் திரு. உ. க. தெ.செ. காசி விஸ்வநாதன் செட்டியார் அவர்கள்.
3. காளி அம்மனுக்கு 5 கிலோ எடையில் அங்கி செய்து கொடுத்தவர்கள், நடராஜபுரம் திரு. ராம. அ. முருகப்பன் செட்டியார் குடும்பத்தினர்.
4. அய்யனார் சன்னதி முன்புறம் உள்ள யானை, பலிபீடம் அங்கி 5.75 கிலோ எடையில் செய்து கொடுத்தவர்கள், கண்டரமாணிக்கம் நகரத்தர்கள்.
5.அய்யனார் மண்டபம் முன்புறம் உள்ள விநாயகருக்கும் மற்றும் நாகருக்கும் 3.50 கிலோ எடையில் அங்கி செய்து கொடுத்தவர்கள், வெற்றியூர் நகரத்தார்கள்.
6. அகோர வீரபத்திரர், முன்னோடி, ராக்காச்சி அம்மன் தெய்வங்களுக்கு 12 கிலோ எடையில் அங்கி செய்து கொடுத்தவர்கள், தேவகோட்டை மாத்தூர் கருப்பூர் பிரிவு நகரத்தார்கள்.
7. அய்யனார் மண்டபம் முன்புறம் உள்ள சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை தெய்வங்களுக்கு 12.0 கிலோ எடையில் அங்கி செய்து கொடுத்தவர்கள் அரண்மனை சிறுவயல் நகரத்தார்கள்.
8. முத்துப்பட்டி விலக்கில் கட்டப்பட்டு வரும் ஆர்ச் மற்றும் கோவில் வளாகத்தில் சுகாதார வளாகத்தை கட்டித்தர பொறுப்பு ஏற்றுக் கொண்டவர்கள் அரண்மனை சிறுவயலைச் சேர்ந்த திரு. சுப வைரவன் செட்டியார் குடும்பத்தினர் மதிப்பீடு ரூபாய் பத்து லட்சம்.
9. ஐயனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு இதுவரை 50 பவுன் தங்கமும், மற்றும் 100 கிலோ வெள்ளியும் பல்வேறு உபயதாரர்களால் வழங்கப்பட்டுள்ளது.
10. 03.08.2023 அன்று நடைபெற்ற பதினெட்டம் பெருக்கில் பெரிய கருப்பருக்கு 108 கிடாய்கள் படைக்கப்பட்டு சுமார் 7ஆயிரம் நபர்களுக்கு மூன்று வேளையும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
அன்னதான அறக்கட்டளை ஏற்பாட்டில் 09.09.2022 முதல் ஒவ்வொரு வாரமும் அன்னதானம், வெள்ளிக்கிழமையன்றும் ஞாயிற்றுக்கிழமையன்றும் நடைபெற்று வந்தது.
மேற்படி அன்னதான உபயத்தை மாதத்தின் முதல் வாரத்திற்கு நச்சாந்து பட்டி வைரவன் கோவில் கழனிவாசல் உடையார் பிரிவு சேவாத்தாள் படைப்பு வீடு நகரத்தார்களும், இரண்டாம் வாரத்திற்கு அரண்மனை சிறுவயல் திரு.லெ.அரு.கா.டாக்டர்.அருணாச்சலம் செட்டியார்,டாக்டர்.திருமதி.நா.நாகரெத்தினம் ஆச்சிகுடும்பத்தார்களும்,மூன்றாம் வாரத்திற்கும்,கடலூர் மற்றும் பாண்டிச்சேரி K.V. Tex உரிமையாளர்களான திரு. M. கண்ணப்பன் செட்டியார் அவர்களும் மற்றும் அவர் சகோதரர் திரு.M.வெங்கடேஸ்வரன் செட்டியார் அவர்களும் நான்காம் வாரத்திற்கு அரண்மனை சிறுவயல் திருமதி.டாக்டர் சுப. உ. தெய்வானை ஆச்சி அவர்களும் பொறுப்பு ஏற்று சிறப்பாக நடத்தி வந்துள்ளார்கள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கல்லல் திரு.. உ. கா. தெ. சுப.தெய்வராயன் செட்டியார் அவர்களும் மேலும் ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும கிருத்திகை அன்று கல்லம்பட்டியை சேர்ந்த யாதவ சமுதாயத்தினர் பொறுப்பு ஏற்று சிறப்பாக நடத்தி வந்துள்ளார்கள்.
மேலும் அன்னதான அறக்கட்டளையின் மிகச் சிறப்பான தொடர் முயற்சியின் பலனாக 01.08.2023 முதல் அனுதினமும் அன்னதானம் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, கீழ்க்கண்ட அட்டவணையில் உள்ள உபயதாரர்கள் பொறுப்பு ஏற்று கொண்டு, மிக சிறப்பாக ஒவ்வொரு நாள் மதியம் சுமார் 75 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
அன்னதான அறக்கட்டளை ஏற்பாட்டில்
01.08.2023 முதல் அனுதினமும் அன்னதானம்
| கிழமை | உபயதாரர்கள் | ஊர் |
|---|---|---|
| முதல் திங்கள் | திரு. RM. முத்து செட்டியார் | அரண்மனை சிறுவயல் |
| இரண்டாம் திங்கள் | திரு. KR.S.G. முத்து செட்டியார் | அரண்மனை சிறுவயல் |
| மூன்றாம் திங்கள் | திரு. நா.லெ.அரு.லெ.சொ.அரு. லெட்சுமணன் செட்டியார் | ஒக்கூர் கீழப்பூங்குடி |
| நான்காம் திங்கள் | கல்லம்பட்டி யாதவ சமுதாயத்தினர் | கல்லம்பட்டி |
| முதல் செவ்வாய் | திரு.SP.M.கண்ணன் செட்டியார் குடும்பத்தினர் | ஆறாவயல் |
| இரண்டாம்செவ்வாய் | திரு.உ.சுப.விவேக் என்ற உடையப்பன் குடும்பத்தினர் | அரண்மனை சிறுவயல் |
| மூன்றாம் செவ்வாய் | திரு.O.KN. உடையப்பன் குடும்பத்தினர் | அரண்மனை சிறுவயல் |
| நான்காம் செவ்வாய் | உடையார் ராக்கத்தாள் அறக்கட்டனள | வெற்றியூர் |
| முதல் புதன் | திரு.தண்ணீர்மலை @தெய்வராயன் செட்டியார் | கல்லல் |
| இரண்டாம் புதன் | திரு.இராமநாதன் செட்டியார் குடும்பத்தினர் | அரண்மனை சிறுவயல் |
| மூன்றாம் புதன் | திருமதி.உலகம்மை ஆச்சி குடும்பத்தினர் | அரண்மனை சிறுவயல் |
| நான்காம் புதன் | திருமதி. L.MR. ஐயப்பன், திருமதி சித்ரா குடும்பத்தினர் | கண்டரமாணிக்கம் |
| முதல் வியாழன் | கள்ளிப்பட்டு யாதவ சமுதாயத்தினர் | கள்ளிப்பட்டு |
| இரண்டாம வியாழன் | திரு. நா.லெ.அரு.சொ.அய்யப்பன் செட்டியார் குடும்பத்தினர் | ஒக்கூர் கீழப்பூங்குடி |
| மூன்றாம் வியாழன் | மாத்தூர் கருப்பூர் பிரிவு தேவகோட்டை நகரத்தார்கள் | தேவகோட்டை |
| நான்காம் வியாழன் | திரு. வெ.அழ.வெ. சுப்பிரமணியன் செட்டியார் | அரண்மனை சிறுவயல் |
| முதல் வெள்ளி | நச்சாந்துபட்டி வைரவன் கோவில் கழனிவாசல் உடையார் பிரிவு சேவாத்தாள் படைப்பு வீடு நகரத்தார்கள் | நச்சாந்துபட்டி |
| இரண்டாம் வெள்ளி | திரு. அரு.கா.Dr.அருணாச்சலம், திருமதி. Dr.N. நாகரெத்தினம் குடும்பத்தினர் | அரண்மனை சிறுவயல் |
| மூன்றாம் வெள்ளி | KV Tex உரிமையாளர்கள் திரு. M. கண்ணப்பன் செட்டியார், திரு.M. வெங்கடேஸ்வரன் செட்டியார் குடும்பத்தினர், மற்றும்ஊழியர்கள் | கடலூர், பாண்டிச்சேரி |
| நான்காம் வெள்ளி | திருமதி .சுப.உ. Dr.தெய்வானை குடும்பத்தினர் | அரண்மனை சிறுவயல் |
| முதல் சனி | திரு S.R. கண்ணன்&Sons, திருமதி G. கவிதா கோபாலகிருஷ்ணன் | ஆடுதுறை,கரூப்பூர் |
| இரண்டாம் சனி | திரு. சபா.சுப்பிரமணியன் செட்டியார் | அரண்மனை சிறுவயல் |
| மூன்றாவது சனி | திரு.பெரி.உ.அரு.கண்ணன், திருமதி க.தேன்மொழி குடும்பத்தினர். | வெற்றியூர் |
| நான்காவது சனி | திரு. KR.KN. குடும்பத்தினர் | அரண்மனை சிறுவயல் |
| முதல் ஞாயிறு | நச்சாந்துபட்டி வைரவன் கோவில் கழனிவாசல் உடையார் பிரிவு சேவாத்தாள் படைப்பு வீடு நகரத்தார்கள் | நச்சாந்துபட்டி |
| இரண்டாம் ஞாயிறு | திரு. அரு.கா.Dr.அருணாச்சலம், திருமதி. Dr.N. நாகரெத்தினம் குடும்பத்தினர் | அரண்மனை சிறுவயல் |
| மூன்றாம் ஞாயிறு | KV Tex உரிமையாளர்கள் திரு. M. கண்ணப்பன் செட்டியார், திரு.M. வெங்கடேஸ்வரன் செட்டியார் குடும்பத்தினர், மற்றும்ஊழியர்கள் | கடலூர், பாண்டிச்சேரி |
| பிரதிமாதம்29ம்தேதி | களத்திப்பட்டி கிராம பொதுமக்கள் | களத்திப்பட்டி |
| பிரதிமாதம்30ம்தேதி | கல்லல் வகையறா பங்காளிகள், திரு.N.RK.N. உடையப்பன், திருமதி. மங்கையர்கரசி குடும்பத்தினர்,திரு. உ.நா. ராஜேந்திரன் குடும்பத்தினர்,திரு. உ .பந்தள ராஜா உடையப்பன் குடும்பத்தினர் , திரு. மு.ரெ. வேலாயுதம் குடும்பத்தினர், தெய்வத்திரு. நா.உ. பழனியப்பன் நினைவாக அவரது குடும்பத்தினர்,திரு. உ. நா. உடையப்பன் குடும்பத்தினர் | |
| பிரதிமாதம்31ம்தேதி | திரு. உ. கருப்பையா யாதவ், திருமதி. பூமாயி அம்மாள் குடும்பத்தினர் | கீழக்கோட்டை |
அரண்மனை சிறுவயல் காலம் அறிவார் கருணை புரிவார்
ஸ்ரீ களத்தி அய்யனார் இறைப்பணியில்
ஸ்ரீ களத்தி அய்யனார் அன்னதான அறக்கட்டளை
96266 16161, 94430 97943, 98435 69381, 95852 08358
