நகரத்தார் திருமணம்

பேசி முடித்துக் கொள்ளுதல்

முகூர்த்தம் வைத்தல் அல்லது கழுத்துருவுக்குப் பொன் கொடுத்தல்

முகூர்த்தக்கால் ஊன்றுதல் ( வடகிழக்கு - ஈசான்ய மூலையில் முகூர்த்தத்தன்றே முகூர்த்தக்கால் விடவேண்டும் )

திருமணம் சொல்லுதல்

கோவிலில் பாக்கு வைத்தல் ( 4 நாள் முன்பாகப் போய்ப் பாக்கு வைக்க வேண்டும் )

கூடி ஆக்கி உண்ணுதல்

அன்றைய தினமே மணை போடுதல்

மாப்பிள்ளைக்கு மிஞ்சி அணிவித்தல்

முதல் சீர் வைத்தல்

தும்பு பிடித்தல்

மறுசீர் வைக்கப் போதல் அல்லது மாப்பிள்ளை அறியப்போதல் ( பெண் வீட்டார் போகும் பொழுது கழுத்துரு திருமாங்கல்யத்தை மட்டும் கொண்டு போய்க் கொடுக்க வேண்டியது )

தலைச் சீலையில் முடிதல் ( மாப்பிள்ளை வீட்டில் )

கல்யாண வேவு இறக்குதல் ( மாப்பிள்ளை வீட்டில் )

தலைபிள்ளை கல்யாணமாக இருந்தால் மாம வேவு (இருவீட்டிலும்)

அரசாணைக்கால் கட்டுதல் ( இரு வீட்டிலும் )

மாற்றுக் கட்டுதல் (இரு வீட்டிலும் )

கழுத்துரு வாங்கப் போதல் ( மாப்பிள்ளை வீட்டார் )

மணமகன் கன்னி நீராடுதல்

மணமகளுக்குப் பூரம் கழித்தல்

பகவணம் ( இரு வீட்டிலும் )

காப்புக் கட்டுதல் ( இரு வீட்டிலும் )

மாப்பிள்ளை கோவிலுக்கு போய் வருதல்

மாப்பிள்ளை திருப்பூட்டச் செல்லுதல்

பெண் எடுக்கி காட்டுதல் ( திருப்பூட்டச் செல்கையில் பெண் வீட்டுக்குள் மாப்பிள்ளை நுழையுமுன் )

திருப்பூட்டுதல், பின்னர் ஆசிர்வாதம் வாங்குதல்

இசைவுப் பிடிவு மானம் எழுதுதல்

திருப்பூட்டிய சடங்கு ( மாமியார், நாத்தனார் )

மணவரைச் சடங்கு; விநாயகர் பூசை, வர்ண கும்ப பூசை, பிறகு அக்னி வளர்த்து நவக்கிரக ஹோமம், ஆயுஷ் ஹோமம், அரிமணம் இடுதல் பூமணம் இடுதல் மாப்பிள்ளைக்குச் சாப்பாடு போடுதல்

பணம் எழுதுதல்

கும்பிட்டுக் கட்டிக் கொள்ளுதல்

மஞ்சள் நீராடுதல்

காப்புக் கழற்றிக் கால் மோதிரம் இடுதல்

மாப்பிள்ளைக்குப் பெண் சாப்பாடு போட்டுத் தானும் சாப்பிடுதல்

நாணாளைச் சடங்கு ( வெள்ளி கால் மிஞ்சி எடுத்துப் போக வேணும்)

பிள்ளை எடுக்கிக் கொடுத்தல்

பெண் சொல்லிக் கொள்ளுதல்

பெண் அழைப்பு

பெண் அழைத்த சடங்கு

குலம் வாழும் பிள்ளை எடுத்தல்

சீராட்டுக் கொடுத்தல்- பாக்குச் சுருள்

பால் வேவு, முதல் வருடப் பொங்கல் வேவு

பால், பழம் சாப்பிட ஆயாள் வீடு சென்று வருதல்

மேலே கூறியுள்ள சடங்குகள் பலவற்றிற்கு உள்ளே விளக்கம் காணலாம்.

  • விரளி மஞ்சள்
  • நிலை விளக்கு
  • சர விளக்கு
  • அரசாணி மேடை
  • அரசாணி அடு்ப்பு
  • அரசாணிக்கால் கட்டக் கழி, பாலைக்குச்சி, கிளுவைக் கம்பு
  • பவழம், கால் ரூபாய், வெள்ளிக்காசு
  • மாவிலை
  • அரச இலை
  • முளைப்பாலிகைக் கிண்ணங்கள்5
  • சிலேட்டு விளக்கு
  • பெரிய தாம்பாளம்
  • முக்காலி2
  • சருவச் சட்டி2
  • கெண்டிச் செம்பு
  • சடங்குத் தட்டு (7 கிண்ணங்களுடன்)
  • படி
  • குழவி பட்டுடன்
  • கத்தரிக்காய்
  • நவதானியம்
  • குலம் வாழும் பிள்ளை
  • தவலைகள்
  • வட்டு்வப்பை
  • வெள்ளைக் கம்பளி
  • எழுத்தாணி
  • பாக்குச் சுருள்
  • ஒலைக்கடகம்
  • வேவுக்கடகம், கத்தரிக்காய்
  • ஏட்டு ஒலை
  • பச்சரிசி
  • 10 நிர் நூல் கண்டு
  • கழுத்துரு கோக்க ‘0’ மார்க் களிநூல்
  • மாமப்பட்டு
  • சங்கு
  • ஆலத்தித் தாம்பாளம்
  • விபூதித்தட்டு
  • இசைவுப் பிடிமானம் புத்தகம்
  • மொய்பண ஏடு புத்தகம்
  • தடுக்கு 3
  • மணவரை விரிப்பு
  • குதிரை விரிப்பு
  • பால் செம்பு
  • பால் வேவுக்கு நெல் கடகம்
  • மணை

  • அரைத்த மஞ்சள்
  • நெல்படி1
  • உப்பு படி1
  • கத்தரிக்காய்5
  • பழம்5
  • பால்
  • சருவச்சட்டி, சத்தகம்
  • சந்தனம்,புஷ்பம்
  • அரிசிபடி1
  • இலை அடுக்கு1
  • தேங்காய்3
  • வெற்றிலை பாக்கு
  • செம்பு, முக்காலி
  • மாவிலை, வேப்பிலை
அரசாணிக்கு முன்னால் கோலம் போட்டு வைக்க வேண்டியது. பெண்ணுக்கு அம்மான் சம்சாரம் பூரம் கழிக்க இருக்க வேண்டும்.

  • அரைத்த மஞ்சள்
  • நூல் கண்டு
  • மாமப் பணம் ரூ 2
  • வாழைப்பழம்10
  • வெற்றிலை பாக்கு
  • கதம்ப புஷ்பம்
  • முனை முரியாத விரளி மஞ்சள்
  • கரைத்துணி
  • தேங்காய்3
  • இலை அடுக்கு1
  • சந்தனம்
  • மாங்கொப்பு
  • நெல் படி1
  • பால் உழக்கு1/2
  • மணல்
  • சமித்து
  • முக்காலி2
  • தாம்பாளம்2
  • முளை திரவியம்
  • செம்பில் தண்ணீர்
  • பச்சரிசி படி1
  • நெய் உழக்கு1/2
  • உமி
  • சூடன்
  • சருவச்சட்டி2
  • பாலிகைக் கிண்ணம்5
  • சிவப்புப் பட்டு1
  • (மாப்பிள்ளை வீட்டில் திருமாங்கல்யம் கோத்து வைக்கவும்)

அரிமணம், பூமணம் இட மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாருக்கும், பெண் வீட்டார், மாப்பிள்ளை வீ்ட்டாருக்கும் முன்கூட்டியே சொல்லி விடவேண்டும்

திருமண நடைமுறைகள்

பேசி முடித்துக்கொள்ளுதல்

பெண் வீட்டிலிருந்து ஆண்கள் இருவரும் பெண்கள் இருவரும் (செலவைச் சுருக்க வேண்டுமென்ற வழக்கமாயிவிட்டது) இக்காலத்தில் இந்த வைபவத்திற்கு சொந்தக்காரர்கள் , தெரிந்தவர்களையும் கூப்பிடுவது வழக்கமாகிவிட்டது.

மாப்பிள்ளை வீட்டிற்குச் சென்று எங்கள் இன்னார் பெண் இன்னவளை, இன்னார் பையன் இன்னவனுக்குக் கல்யாணம் செய்கிறோம் என்றும், இவ்வளவு தொகை இவ்வளவு நகை தருகிறோம் என்றும் சொல்வார்கள்.

மாப்பிள்ளை வீட்டார்அதற்குச் சம்மதித்து வாளி, பழம், ரூபாயும் தருவார்கள், இவ்வாறு கல்யாணம் பேசி முடித்துக் கெட்டி பண்ணிக் கொள்ளப்படும்.

முகூர்த்தம் வைத்தல்
மூகூர்த்தக்கால் ஊன்றுதல்
கல்யாணம் சொல்லுதல்
கோவிலில் பாக்கு வைத்தல்
கொழு மேளம் வாசித்தல்
அரசாணிக்கால் (அரசாணைக்கால்)
அரசாணிக்கால் கட்டுதல்
மாற்றுக் கட்டுதல்
முதல் சீர் வைத்தல்
மறு சீர் வைத்தல்
தலைச்சீலை முடிதல்
கழுத்துரு வாங்கப்போதல்
கன்னி நீராடுதல்
பூரம் கழித்தல்
அரிமனம் இடுதல்
பூமணம் இடுதல்
திருப்பூட்டச் செல்லுதல்
திருப்பூட்டுதல்
இசைவு பிடிமானம் எழுதுதல்
திருப்பூட்டிய சடங்கு
காப்பு கழற்றி கால் மோதிரம் அணிவித்தல்
சீராட்டுக் கொடுத்தல்
பால் வேவு
பொங்கல் வேவு
ஆலத்தி
ஆலத்தி எடுத்தல்
சடங்குத் தட்டு
முளைப்பாலிகை
கோட்டை கட்டுதல்

ஸ்ரீ தன உண்டியல் மாதிரி

ஸ்ரீ தன உண்டியல் மாதிரி (முன்பக்கம்)
ஸ்ரீ தன உண்டியல் மாதிரி (பின்பக்கம்)

சக்தியொரு பாதியாய்ச் சிவனுமொரு பாதியாய்த்
தர்மத்தில் இணைந்து வாழ்வோம்
சக்திவழி நேர்மையாய்ப் பண்புவழி மேன்மையாய்ப்
பாரெலாம் வணங்க வாழ்வோம் !
பள்ளியறை கொள்வதில் பரமனடி சேர்வதில்
பக்கத்தில் பங்கு கொள்வோம்
பாதாதி கேசமும் சீரான நாயகன்
பளிச்சென்று துணைவி வாழ்க !
படுவதொரு துயரேனும்   வருவதொரு சுகமேனும்
பாதியாய்த் துணைவன் வாழ்க !
தாய்வீடு விட்டபின் தன்வீடு தாய்வீடு
என்றெண்ணியே தலைவி வாழ்க !
சமகால யோகமிது வெகுகால யாகமென
சம்சாரம் இனிது வாழ்க !

- கண்ணதாசன்.

கழுத்துரு

கழுத்துரு உறுப்படிகள்

  • மேல் பாகம்: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16
  • கீழ்ப்பாகம்: 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31
  • கடை மணி: 1, 16, 17, 31
  •  2, 3, 4, 6, 8
  • உரு: 10, 12, 14, 15, 18
  •  19, 20, 22, 23, 25
  • ஏத்தனம்: 5, 13, 21, 27
  • லெட்சுமி ஏத்தனம்: 24
  • சரி மணி: 7, 11
  • திருமாங்கல்யம்: 9

பிள்ளைச்சரடு இழைதல்

இதைப்போல 7 பாகம் நூல் எடுத்து 3இல் ஒரு பங்காகச் சங்கிலிப் பின்னல் பின்னி மஞ்சள் ஏற்றி, அதில் ஒற்றைத் தும்பை சேர்க்க வேண்டும்.

ஒரு நல்ல நாள் பார்த்து பெண்ணின் தாயார் வீடு சென்று கழுத்துருவின் இடப்பக்கத்தில் இரண்டு கயிற்றிலும் சேர்த்துக் குச்சி, தும்பு துவாளையைக் கட்டி பின்னர்க் கழுத்துருவைக் கழுத்தில் அணிந்து கொண்டு சாமி கும்பிட்ட பின்னர்க் காய்ச்சி ஊத்திக் கொண்டு கழற்றி வைக்க வேண்டும்.

கழுத்துரு கோத்தல்

கழுத்துரு நாட்டக்கோட்டை நகரத்தாரர்களுக்கு மட்டுமே உரிய மங்கல அணிகலன்களில் முக்கியமானதாகும்.

திருமணத்திற்கு முதல் நாள் கழுத்துரு வாங்கப்போவது ஒரு சடங்காகும். அப்பொழுது மணமகள் வீட்டிலிருந்து மணமகன் வீட்டார் கழுத்துருவை வாங்கி வந்து பெரியவர்கள் இருந்து சரடுபின்னிக் கோப்பது வழக்கம்.

கழுத்துரு என்பது கழுத்தில் அணியும் பல உருக்கள் கொண்ட அணிகலனாகும். இது கோப்பதற்கு 10 நிர் வெள்ளை நூல் கண்டு வாங்கவேண்டும். இரு பெரியவர்கள் அந்த நூலில் 21 பாகம் எடுத்து, அதை மூன்றாக மடித்து ஒரு மடிப்புக்குள் இன்னொரு மடிப்பைப் பின்னலாகக் கொடுத்து வாங்கி, சங்கிப் பின்னல் போலப் பின்னி நன்றாக இறுக்கமாகத் திரித்துக் கொண்டு பட்டணம்மஞ்சளை நீரில் நனைத்துக்கொண்டு அந்த நூலில் நன்றாகத் தேய்த்து மஞ்சள் நன்றாக ஏறும்படி செய்து முறுக்கு விடாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். அப்படிக் கிடைப்பது 7 பாகமாக இருக்கும். அதை இரண்டாக மடித்துக் கழுத்துருவில் 31 உருப்படிகளையும் கோக்க வேண்டும்.

மேல் பாகம், கீழ்ப்பாகம் இரண்டிலும் கோத்த பின் இரண்டையும் இரு முனைகளிலும் தனித்தனியே உருவி வராத நிலையில் நன்றாக முடிச்சுப் போட வேண்டும்.