ஸ்ரீ களத்தீருடைய ஐயனார் கோவில்
அரண்மனை சிறுவயல் ஊர் எல்லையில் வலதுபுறம் திரும்பி இரண்டு கிலோமீட்டர் பயணம் செய்து, களத்திவயலில் உள்ள களத்தீருடைய ஐயனார் கோவில் சென்று அடையலாம்.
களத்தீருடைய ஐயனாருடன் பரிவார தெய்வங்களாக காளி அம்மன், பெரியகருப்பர், சின்ன கருப்பர், நொண்டி கருப்பர், பேச்சி, ராக்கச்சி, ஏழுகன்னிமார் சேவாத்தாள் வீரபத்திரர், அபய பண்டிதர், ஆதிரை அம்மன் முன்னோடி ஆகியோருடன் விநாயகர் வள்ளி தெய்வானை உடனாய சுப்பிரமணியர், ஆஞ்சநேயர் ஆகியோரும் கருவறையின் முன் மண்டபத்தின் இடது பக்கம் வைரவரும் உள்ளனர். கோவில் விழாக்களில் குதிரை எடுப்பு சிறப்புடைய ஒன்று.
இக்கோவில் ஏற்படுவதற்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்ச்சி. இந்த வழியாக அருகிலுள்ள கிராமத்துக்காரர்கள் பால் கொண்டு போவது உண்டு. ஒவ்வொரு முறையும் இந்த இடத்தில் செல்லும் சமயம் அவர்கள் கால் இடறி தடுமாறிப் பால் கீழே கொட்டிக் கொண்டிருந்தது. இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்றெண்ணிக் கிராமத்துக் காரர்கள் இவ்விடத்தை தோண்டிய போது திடீரென இரத்தம் பீறிட்டது. பின்னர்தான் நிலத்தில் ஐயனார் சிலை புதையுண்டிருப்பதும், அதன் தலையில் வெட்டுப்பட்டுத்தான் இரத்தம் வெளிப்பட்டது என்பதும் தெரியவந்தன. தலையிலும், தோளிலும் வடுக்கள் உள்ள இந்த ஐயனார் சிலையை வைத்தே இந்த கோவில் எழுந்தது.
மேலும் ஒரு வருடம் மழை பெய்து கண்மாய் நிரம்பி இருந்தபோது ஒரு நாள் நள்ளிரவில் மீண்டும் திடீரென பலத்த மழை பெய்தது. அதில் கண்மாய் கரை உடைக்கும் தருவாயில் இருக்கவே அய்யனார் உடனடியாக பெரியகருப்பர், சின்னகருப்பர் சுவாமிகளை, அழைத்து குதிரையில் சென்று கரை உடைந்து விடாதபடி காவல் இருக்குமாறு கட்டளையிட்டார். அவர்களும் அய்யனார் உத்தரவுப்படி குதிரையில் சென்று கண்மாய் கரை உடைக்காதவாறு காவல் இருந்தனர். அய்யனார் அன்றிரவே ஜமீன்தார் கனவில் தோன்றி மழையால் கண்மாய் கரை உடைக்க இருக்கிறது நீங்கள் இப்படி தூங்குகிறீர்களே என்று கூறி நான் கரை உடைக்காதவாறு காவலுக்கு குதிரையுடன் கருப்பர்களை அனுப்பி இருக்கிறேன். அவர்கள் விடிந்ததும் தாங்கள் அறிய குதிரையை நிறுத்திவிட்டு கோவிலுக்கு வந்து விடுவார்கள். நீங்கள் குதிரையை கோவிலுக்கு கொண்டு வந்து சேருங்கள் என்று கூறி மறைந்தார்.
ஜமீன்தாரும் விடிந்ததும் ஊர் மக்களை அழைத்து நடந்ததை கூறி அனைவரும் கண்மாயை நோக்கி சென்றனர். அங்கு கண்மாய்க்கரை உடைக்கும் தருவாயில் உள்ள இரண்டு இடத்தில் ( மண் ) குதிரைகள் இரண்டு இருந்தது. இதனை கண்ட மக்களுக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் உண்டாயிற்று. உடனடியாக இறங்கி மக்களை காப்பாற்றும் அய்யனார் களத்தில் அய்யனார் என முழக்கமிட்டு வணங்கினார்கள். மேலும் கரையில் இருந்த குதிரைகளை மக்கள் தாரை தப்பட்டையுடன் தூக்கி வந்து கோவிலில் சேர்த்தனர். அன்று முதல் களத்திருடய அய்யனார் என்று விளங்கியதாக கருதப்படுகிறது.


நற்சாந்துப்பட்டி ஸ்ரீ சேவாத்தாள் படைப்பு
ஆரம்ப காலத்தில் நற்சாந்துபட்டி கடைவீதியில் திரு.கும.சுப. சுப்பிரமணியன் செட்டியார் இல்லத்தில் படைப்பு வீடு அமைந்திருந்தது. தீபம் மட்டும் ஏற்றி வழிபாடு நடைபெற்று வந்தது. எந்த ஊரில் கோவில் அமைந்து இருக்கிறது என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை. திரு.கும.அ. பழனியப்ப செட்டியார் அவர்களும் திரு.கும. பழனியப்ப செட்டியார் அவர்களும் மாட்டு வண்டியில் செட்டிநாட்டு ஊர்கள் எல்லாவற்றிற்கும் சென்று, சேவாத்தாள் குடிகொண்டிருக்கும் கோவில் எங்கு உள்ளது, என்று ஒரு வருடம் தேடி கண்டுபிடித்தார்கள். திரு.கும. சித. சிதம்பரம் செட்டியார் வீட்டில் நிறைய கோடாங்கிகளைக் கொண்டு குறியும் கேட்டார்கள். அதன் பின்னர் விவரம் தெரிந்தது, சிவகங்கை மாவட்டம் கல்லல் என்ற ஊருக்கு பக்கத்தில் அரண்மனை சிறுவயல் என்ற ஊரில் வயல் வெளியில் களம் இருக்கும் இடத்தில் களத்திருடைய ஐயனார் கோவிலில் சேவாத்தாள் கோவில் முன் மண்டபத்தில் வீற்றிருக்கிறாள் என்பதை கண்டறிந்தனர்.
அரண்மனை சிறுவயல் வேளார்கள் பெயரும், அலைபேசி எண்களும்
அன்பு வேளார்
+91 97872 00440
முத்தையா வேளார்
+91 96779 98726
மெய்யப்பன் வேளார்
+91 6382 645 381
+91 99435 53308
கருப்பையா வேளார்
+91 85248 51686
சுவாமிநாதன் வேளார்
+91 94863 60398
அர்ச்சுணன் வேளார்
+91 90475 47703
விக்னேஷ் அன்பு வேளார்
+91 63820 62447
காசி வேளார்
+91 98435 57576
கனி வேளார்
+91 99435 59639
சந்திரன் வேளார்
+91 90422 06939

நற்சார்வு சாரும்நற் செட்டியார் குலந்தனிலே பொற்புடனே பூத்தவளே சேவாத்தாள் தாயே ! நல்லுடையவர் இறைகலந்த நற்குல மாமணியைச் சொல்லுடையவர் வாழ்த்திக் குட முழக்கிட்டு வாழ்த்துவோமே !

மண்வெட்டி வெட்டுப்பட்டு மகிமையுடன் உதித்த தெய்வமே ! மண் குதிரை புல் தின்ன செயல் செய்தவரே ! சேமங் குதிரை வாகனரே ! சிவன் ராத்திரிப் பிரியரே ! கண் கொடுத்த தெய்வமே ! படைமுகம் காட்டிய பரம்பொருளே ! எங்களை காக்கும் களத்தீருடைய ஐயனாரே போற்றி ! போற்றி !! போற்றி !!!

கருமைபெற்ற உள்ளந்தனை உருட்டி நோக்கி இருள்பெற்ற இரவுதனைத் தடுத்து நீக்கி நல்லுடையவர் பக்கல் தன்னில் குடிகொண்ட கருப்பர் தண்கால் பற்றுவோமே !
ஸ்ரீ களத்தி ஐயனார் அன்னதான அறக்கட்டளை
அரண்மணை சிறுவயல்
அன்னதான அறக்கட்டளை 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு அறக்கட்டளை முறைப்படி அரசாங்க சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பதிவு எண் 189/ 11 படி 15.02. 2011ல் பதிவு செய்யப்பட்டது.
உறுப்பினர்கள்





இதர உறுப்பினர்கள்

திரு. நா. உடையார் அம்பலம்,
த/பெ. நாராயணன், பெரியார் தெற்கு தெரு, வெற்றியூர், கல்லல் வழி, சிவகங்கை மாவட்டம்.
திரு. பெரி. இராமையா யாதவ்,
த/பெ. பெரியகருப்பன் யாதவ், நா.கோவில்பட்டி, மேலூர், மதுரை மாவட்டம்.
திரு. பா. காளீஸ்வரன்,
த/பெ. பாலுச்சாமி வேளார், கொல்லங்குடி, சிவகங்கை மாவட்டம்.
திரு. உ. முரளி யாதவ்,
த/பெ. உடையப்பன் யாதவ் , சுந்தனேந்தல், சிவகங்கை மாவட்டம்.
திரு. கு. ராம. கும. கும. இராமநாதன்செட்டியார்,
த/பெ.குமரப்ப செட்டியார், கம்பன் வீதி, நற்சாந்துபட்டி, புதுக்கோட்டை மாவட்டம்.
திரு. சி.வெள்ளைச்சாமி,
த/பெ. சின்னச்சாமி, சுந்தரநேந்தல், சிவகங்கை மாவட்டம்.
அறக்கட்டளையின் பணிகள்
1 ஸ்ரீ களத்தி ஐயனார் அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், உபயதாரர்கள் உதவியால் அன்னதான அறக்கட்டளை தொடர்ந்து தன் திருப்பணிகளை செய்து வருகிறது.
2. அன்னதான அறக்கட்டளை சார்பில் சுமார் 16 லட்சம் செலவில் பேவர் பிளாக் பதித்து அன்னதானக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 1.25 கி.மீ தூரத்திற்கு மண்பாதையும் முன்று பாலங்களும் அமைக்கப் பட்டுள்ளது.
3) ஸ்ரீ களத்தி ஐயனார், ஸ்ரீ பெரிய கருப்பர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா சிவராத்திரியன்றும், முக்கிய விசேஷ தினங்களிலும், சிறப்பு அபிஷேகம் செய்தல்.
4) மகா சிவராத்திரிக்கு ஒரு வாரம் முன்னதாக ஆலயம் வரும் பாதைகள் சீர்செய்தல், ஆலய பராமரிப்பு ஆலயம் உள்ளேயும் வெளியிலும் பராமரிப்பு செய்தல், ஊரணி சுத்தம் செய்தல், குடிதண்ணீர் அளித்தல்.
5) மகா சிவராத்திரி இரவு 10 மணி முதல் ஸ்ரீ களத்தி ஐயனாருக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் 21 வகையான சிறப்பு அபிஷேகமும் அறக்கட்டளை சார்பாக நடந்து வருகிறது.
6) மகா சிவராத்திரி அன்று மாலை 6 முதல் மறுநாள் மாலை 6 வரை அரண்மனை சிறுவயலிருந்து ஆலயத்திற்குச் சென்று வர இலவசவேன் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆலயத்திற்குத் தேவையான எண்ணெய், மின் கட்டணம் ஆகியவற்றை அறக்கட்டளை சார்பாக வழங்கப்படுகிறது.
7) ஆலயம் வரும் வழியில் இரு பக்கங்களிலும் மரங்கள் வளர்த்தல் மற்றும் ஆலயம் சம்பந்தபட்ட அனைத்துப் பணிகளையும் முன்னின்று நடத்துதல்.
8) மகாசிவராத்திரி அன்றிலிருந்து மறுநாள் மாலை 5 மணி வரை அறக்கட்டளை சார்பில் அனைத்து பக்தர்களுக்கும் தூய முறைப்படி உணவு அளித்தல்.
9) கடந்த 25 வருடங்களாக கோவிலில் உள்ள மின்விளக்குகளையும், மின்விசிறிகளையும் கட்டமைத்தும், பராமரிப்பு செய்தும், மின் கட்டணத்தையும் அன்னதான அறக்கட்டளைபொறுப்பு ஏற்று நடத்தி வருகிறது
வயிரவன் கோயில்
வயிரவன் கோயிலின் சிறப்பையும் வடிவுடை அம்மை உடனாகிய வளரொளிநாதர் பெருமையையும், வயிரவர் சுவாமியின் சிறப்பையும், பெரிதும் கூறுவது வயிரவன் கோயில் புராணம் என்னும் செய்யுள் நூலாகும். இந்த நூல் கி.பி பத்தொன்பதாம் நூற்றாண்டில் சேந்தன்குடி வி.நடராஜ கவிராயர் அவர்களால் இயற்றப்பட்டது. இந்த நூலை தேவகோட்டையைச் சேர்ந்த வீரசிகாமணி லெ. சின்னையன் செட்டியார் அவர்களால் புத்தகமாக வெளியிடப்பட்டது.
வயிரவர் கோயில் புராணம் மொத்தம் 17 படலங்களைக்களை கொண்டதாகும். அவையாவன 1) பாயிரம், 2) நாட்டுப்படலம், 3) நகரப்படலம், 4) நைமிசபடலம், 5) புராணவரலாற்றுப்படலம், 6) தல விசேடப் படலம், 7) தீர்த்த விசேடப் படலம், 8) மூர்த்தி விசேடப் படலம், 9) தேவர் படலம், 10) தேவர் சரண் புகு படலம், 11) வைரவ படலம், 12)அசுர சங்கார படலம், 13) தேவர் பூசித்த படலம், 14) ததீசி முனிவர் பூசித்த படலம், 15) சந்திரன் பூசித்த படலம், 16) சுக்கிரன் படலம், 17) கிரிகர படலம்.
மொத்தம் 1152 செய்யுட்கள் உள்ளன. அவற்றுள் நாட்டுப்படலம், நகரப்படலம், நைமிசப்படலம், புராண வரலாற்றுப் படலம், தல விசேடப் படலம், தீர்த்த விசேடப் படலம் ஆகியவற்றை தவிர்த்தும் பாயிரத்தைச் செய்யுள் வடிவத்திலேயே கொடுத்தும், எஞ்சிய பத்து படலங்களுக்கு எளிய உரைநடைச் சுருக்கம் தரப்பட்டுள்ளது.
நற்சாந்துப்பட்டி சிவன் கோயில்
புதுக்கோட்டை மாவட்டம் நற்சாந்துபட்டி அருள்மிகு சிதம்பரேஸ்வரர் உடனாய சிவகாமி அம்பாள் ஆலய முதல் மகா கும்பாபிஷேகம் 23.05.1928. புதன்கிழமையன்றும், இரண்டாம் மகா கும்பாபிஷேகம் 04.02.1972. வெள்ளிக்கிழமையன்றும், மூன்றாம் மகா கும்பாபிஷேகம் 04.02.1991. திங்கட்கிழமையன்றும், நான்காம் மகா கும்பாபிஷேகம் 10.06.2005 வெள்ளிக்கிழமையன்றும் நடைபெற்றது. அருள்மிகு சின்ன ஊரணி பிள்ளையார் மற்றும் நாகருக்கு பராமரிப்பு பணிகள் செய்து 21.8.2020. வெள்ளிக்கிழமை அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. அருள்மிகு சிதம்பரேஸ்வரர் உடனாகிய சிவகாமி அம்பாள் திருக்கோவிலில் ஐந்தாம் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமையன்று 24.02.2021 சிறப்பாக நடைபெற்றது
